பாக்கித்தானிய ரூபாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாக்கித்தானிய ரூபாய் (Urdu: روپیہ மொழிபெயர்ப்பு: ரூபியா}}; ஐ.எசு.ஓ: PKR) பாக்கித்தானின் அலுவல்முறையான நாணயம் ஆகும். இதனை நாட்டின் நடுவண் வங்கியாக செயல்படும் பாக்கித்தானிய அரசு வங்கி வெளியிடுகின்றது. மிகவும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் சின்னம் ரூ ஆகும்; சரக்குகளையும் சேவைகளையும் பாவிக்கும் போது வழங்கப்படும் இரசீதுகளில் இச்சின்னம் பயன்படுத்தப்படுகின்றது. பாக்கித்தானில் "ரூபாய்கள்", "ருபாயா" அல்லது "ருபாயே" என அறியப்படுகின்றது. பாக்கித்தானில் ரூபாயின் பெரும் மதிப்புகள் தென்னாசிய எண் முறையில் ஆயிரம், இலட்சம் (100 ஆயிரங்கள்), கோடி (10 மில்லியன்), 1 அரப் (1 பில்லியன்), 1 கரப் (1/10 டிரில்லியன்), 100 கரப் என எண்ணப்படுகின்றன.

Remove ads
வரலாறு



ரூபியா என்ற சொல் ரூப்யா என்ற சமசுகிருத வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது; இச்சொல் "வார்த்த வெள்ளி, வெள்ளி சிட்டை",[3] எனப் பொருள்படும். ருபாயா என்ற சொல்லை நாணயங்களைக் குறிக்க முதன்முதலில் 1540 முதல் 1545 வரையான தனது ஆட்சிக்காலத்தில் சேர் சா சூரி அறிமுகப்படுத்தினார்.
1947இல் பிரித்தானிய ஆட்சி கலைக்கப்பட்ட போது பாக்கித்தானிய ரூபாய் வழக்கத்திற்கு வந்தது. துவக்கத்தில் பிரித்தானிய இந்திய நாணயங்கள்/ ரூபாய்த்தாள்கள் மீது "பாக்கித்தான்" என முத்திரை பதித்து பயன்படுத்தப்பட்டன. புதிய நாணயங்களும் வங்கித்தாள்களும் 1948இல் வெளியிடப்பட்டன. இந்திய ரூபாய் போலவே பாக்கித்தானிய ரூபாயும் 16 அணாக்களாகவும், ஒவ்வொரு அணாவும் 4 பைசா அல்லது 12 பையாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சனவரி 1, 1961 முதல் பதின்மமுறைக்கு மாற்றப்பட்டது; ஒரு ரூபாய்க்கு 100 பைசாக்களாக இருக்கின்றது. இருப்பினும் 1994 முதல் பைசா மதிப்புள்ள நாணயங்கள் வெளியிடப்படவில்லை.
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads