பாக்சைட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாக்சைட்டு(ஆங்கிலம்: Bauxite) என்ற கனிமம், படிவுப் பாறையாகவே, இப்பூமியில் கிடைக்கிறது. இக்கனிமமானது, ஒப்பீட்டளவில் அதிக அளவு அலுமனியத்தை பெற்றுள்ளது. உலகில் கிடைக்கும் அலுமினியத்தின் முக்கிய மூலப்பொருள், பாக்சைட்டே ஆகும். மேலும், பாக்சைட்டில் அலுமினிய கனிமமும், சிப்பசைட்டும்(gibbsite - Al(OH)3), போயேமைட்டும் (boehmite - γ-AlO(OH)), அடயாசுபோரும் (α-AlO(OH)) இருக்கும், கலவையாக உள்ளது. இரண்டு ஆக்சைடுகளுடன், கோயிதைட்டும்(goethite), இமாடைடேவும்([haematite), அலுமினிய களிமண் தாது உப்புகளும், வெண்களிமண்ணும், சிறிய அளவிலான அனடாசும் (anatase - TiO2), இல்மனைட்டும் (FeTiO3 அல்லது FeO.TiO2)கலந்து உள்ளன..[1][2] பெரும்பாலும் பாக்சைட்டிலிருந்து தான் அலுமினிய மாழையைப் பிரித்து எடுக்கின்றனர். வேறு பல கனிமத்தில் இருந்து அலுமினியத்தை எடுக்க முடிந்தாலும், இக்கனிமத்தில் இருந்து அலுமினிய உலோகத்தை பிரித்து எடுப்பதே, அதிக செலவில்லா சிக்கன முறையாகும். இந்த சிக்கன வேதியியல் முறையை, 1886 ஆம் ஆண்டு ஹால் என்ற அமெரிக்க மாணவர், மின்சாரத்தினைப் பயன்படுத்தி எளிய முறையில், அலுமினியத்தை, பாக்சைட்டிலிருந்து பிரித்து எடுத்தார். அதனால் அதற்கு முன் விலை அதிகமான முறையில் எடுக்கப் பட்டது அந்த விலை மிக்க முறைக்கு, ஓலர் தொகுப்பு முறை என பெயராகும். அமெரிக்க மாணவரால், தங்கம் போன்று விலை அதிகம் இருந்த அலுமினியம், மிகவும் விலைவு மலைவு ஆனதால், பல நாட்டினரும் ஏழைகளின் தங்கம் என அழைத்து பயன்படுத்தினர் என்பது, ஒரு வேதியியல் வரலாற்றுப் பதிவாகும்.


Remove ads
கண்டுபிடிப்பு
1821 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டவரான பியெரி பெர்தியர் என்ற நிலவியல் அறிஞர், இகனிமத்தினைக் கண்டறிந்தார். தெற்கு பிரான்சு நாட்டின் பகுதியான, லெசு பாக்சின் (Les Baux-de-Provence) கிராமத்தில் முதன் முதலில் தனது ஆய்வில் அறிந்தார்.[3] 1861 ஆம் ஆண்டு மற்றொரு பிரான்சு நாட்டு வேதியியலாளரான செயிண்ட் கிளெயர் டிவில்லி என்பவரே இதற்கு பாகசைட்டு என்று அந்த கிராமத்தினை நினைவு கூறும் வகையில் பெயரிட்டார்.[4]

இது 2008 ஆம் ஆண்டு தனித்தனியே எடுக்கப்பட்டு கிம்ப் என்ற கட்டற்ற மென்பொருளால் தைக்கபட்ட, பொதுவகத்தின் சிறப்புப்படம் ஆகும்
Remove ads
புவித் தோற்றம்
செந்நிறக் களிமண் (Lateritic) பாக்சைட்டுகள் / சிலிகேட்டு பாக்சைட்டுகள், கார்சுடு([karst) பாக்சைட்டுகளிடம் இருந்து, கனிம மூலத்தால் வேறுபடுகின்றன. கரிம பாக்சைட்டுகளின் (carbonate bauxites) தன்மை இருப்பிடமாக ஐரோப்பா, கயானா, ஜமேக்கா நாடுகளை இருக்கின்றன. கரிமப் பாறைகளும், (carbonate rock) சுண்ணாம்பு கற்களும் , தோலமைட்டும் (dolomite) வானிலையாலழிதல் செயல் மூலம் தோன்றுகின்றன. அவற்றின் கழிவுகள், களிமண்ணுடன் இணைத்து, பல்லடுக்குள் உருவாகின்றன. அப்போது இப்படிவுகள் இறுக்கமாகச் சுண்ணாம்பு கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து உருவாகிறது.
The செம்பூரான்கல்லுக்குரிய பாக்சைட்டு (lateritic bauxites) பெரும்பாலும் வெப்ப வலய நாடுகளில் தோன்றி காணப்படுகின்றன. இவற்றின் தோற்றம், பல வகை சிலிக்கேட்டுகளினால் உருவாக்கப் படுகின்றன. இந்த சிலிகேட்டுகளில் முக்கியமானவைகளாக, கருங்கல், உருமாறிய கருங்கல்(gneiss) (உருமாறிய கருங்கல் : படிகம், களிமம், அப்பிரகம் போன்ற கனிமப் பொருள்கள் கலந்து, வவரிப்பாறை இணைவு உள்ள அடுக்குப் பாறைகள் ஆகும்.) எரிமலைப்பாறை (basalt), சயனைட்டுகள்(syenite), களிப்பாறை ஆகும். இரும்பு அதிகமுள்ள செம்பூரான் பாக்சைட்டுகளின் தோற்றமானது, கடும் தட்பவெப்ப நிலைக் காரணிகளைச் சார்ந்து, ஓரிடத்தில் உள்ள வடிகால்களின் வசதிக்கு ஏற்ப உருவாகும். ஏனெனில், நீரானது வானிலையாலழிதல் நிகழ்வுக்கு முக்கியக் காரணியாகும். வடிகால் வசதி சிறப்பாக இருந்தால், இப்பாறை உருவாகும் காலமும், சூழ்நிலையும் மகிவும் சிக்கலாகவும், கடுமையாகவும் ஆகும் என கருதப்படுகிறது. இந்த நிறை வடிகால் வசதி, வெண்களிமண் கரைவுக்கு காரணமாகி விடுகின்றன.இதற்கு சிப்சைட்டு (gibbsite) பங்கும் குறிப்பிடத்தக்கது எனலாம். அலுமினியம் அதிகம் கிடைக்கும் நிலங்களில், இரும்பு ஆக்சைடு (ferruginous) அதிகம் கிடைக்கும் அடுக்குக்குக் கீழேயே, இயற்கையாக அமைகிறது என்பது நிலவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். செம்பூரான் பாக்சைட்டுகளிலுள்ள, அலுமினயம் ஐட்ராக்சைடு சிப்சைட்டு படிவதற்குக காரணியாக இருக்கிறது. exclusively gibbsite.
ஜமேக்கா நாட்டில் செய்யப்பட்ட மண் ஆய்வுகளின் படி, காட்மியத்தின் தோற்ற உயரடுக்கு, என்பதிலிருந்து பாக்சைட்டுகள் தோற்றத்தினை உறுதி செய்கிறது. மியோசின் (Miocene) காலத்திய நடுஅமெரிக்க எரிமலை செயல்களால் தோன்றிய சாம்பல் படிவுகளால், உருவானதாக, இந்த ஆய்வு கூறுகிறது. இத்தோற்றத்திற்கு கிளர்த்திய பாக்சைட்டு (activated bauxite) பங்கும் இருக்கலாமென்று கருதப்படுகிறது.
Remove ads
இபக்கங்களையும் காணவும்
- பாக்சைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
- பாக்சைடு, ஆர்கன்சா - இது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
மேற்கோள்கள்
மேலும் கற்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads