பாக்மதி ஆறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாக்மதி ஆறு (Bagmati River) , நேபாள நாட்டின் சிவபுரி மலைகளில் வாக்துவார் எனுமிடத்தில் உற்பத்தியாகி, காத்மாண்டு சமவெளியில் பாய்ந்து, காட்மாண்டு நகரத்தையும், பதான் நகரத்தையும் பிரிக்கிறது. பாக்மதி ஆறு நேபாளத்தின் புனித ஆறாக இந்துக்களும், பௌத்தர்களும் கருதுகிறார்கள். பாக்மதி ஆற்றின் கரையில், காத்மாத் சமவெளியில் பசுபதிநாத் கோவில் உள்ளிட்ட பல இந்து மற்றும் பௌத்த சமய வழிபாட்டுத் தலங்கள் உள்ளது.
பாக்மதி ஆறு, இந்தியாவின் கங்கை ஆறு போன்று புனிதமானது.
நேபாள நாட்டு இந்து சமய வழக்கப்படி, இறந்தவரின் உடலை எரிப்பதற்கு முன்னர், புனித பாக்மதி ஆற்றில் மூன்று முறை அமிழ்த்தி எடுக்கின்றனர்.[1] [2]
Remove ads
வரலாறு

காத்மாண்டு நகர நாகரீகத்திற்கும், நகரமைப்புக்கும் பாக்மதி ஆறே காரணம் என நேபாள நாட்டவர்கள் கருதுகின்றனர்[3] பௌத்த சமய சாத்திரங்களான விநய பீடகத்திலும், நந்தபக்காவிலும், பாக்மதி ஆற்றை வாக் முத்தா (புலி வாசல்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மஜ்ஜிக நிக்காயத்தின் பத்த சுத்தானாவிலும் இவ்வாற்றை பாகுமதி என்று குறிப்பிடுகிறது. [3][4]. காத்மாண்டின் வடகிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவபுரி மலையில் உற்பத்தியாகும் பாக்மதி ஆறு, பின்னர் தென்மேற்கில் காத்மாண்டு சமவெளியை வளப்படுத்துகிறது.
Remove ads
புவியியல்
காத்மாண்டு மாவட்டத்தில் அமைந்த மகாபாரத மலைத்தொடரின் சிவபுரி மலையில் 2690 மீட்டர் உயரத்தில் உள்ள பாக்துவார் எனுமிடத்தில் பாக்மதி ஆறு உற்பத்தியாகி, காட்மாண்டு மற்றும் பதான் நகரங்களிடையே பாய்கிறது.
பின்னர் தெற்கு முகமாக பாய்ந்து, இந்தியாவின் பிகார் மாநிலத்தின் சீதாமரி, சிவஹர், முசாபர்பூர், ககரியா வழியாக பாய்ந்து இறுதியில் ககரியா அருகில் பத்லாகாட் எனுமிடத்தில் கோசி ஆற்றில் கலக்கிறது.
துணை ஆறுகள்
பாக்மதி ஆற்றின் இடது பக்க கரையில் லால்பகையா ஆறு, விஷ்ணுமதி ஆறு மற்றும் மனோகரா ஆறுகளும்; வலது பக்க கரையில் மாரின் கோலா ஆறு, அத்வாரா ஆறு மற்றும் கமலா ஆறு போன்ற துணை ஆறுகள் கலக்கிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads