பாக்மதி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாக்மதி மண்டலம் (Bagmati Zone) (நேபாளி: बागमती अञ्चलⓘ Bāgmatī Añcal) தெற்காசியாவின் நேபாள நாட்டில் அமைந்த பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மத்திய நேபாளத்தின் மத்திய வளர்ச்சி பிரந்தியத்தில் உள்ள மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலத்தில் எட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளது.

காட்மாண்டு மற்றும் லலித்பூர் நகரங்கள் இம்மண்டலத்தின் பெரிய நகரங்கள் ஆகும். நேபாள இராச்சியத்தின் மையப் பகுதியாக பாக்மதி மண்டலம் அமைந்திருந்தது.
Remove ads
மக்கள் தொகையியல்
9,446 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மண்டலம், நேபாளத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.42% கொண்டுள்ளது. காட்மாண்டு சமவெளியில் அமைந்த இம்மண்டலத்தில் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 38,43,596 மக்கள் வாழ்கின்றனர். [1][2]இம்மண்டலத்தில் நேபாள மொழி, நேவாரி மொழி, நேபால் பாசா மற்றும் தாமாங் மொழிகள் பேசப்படுகிறது. இம்மண்டலத்தில் நேவார் மக்கள் மற்றும் தமாங் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
மாவட்டங்கள்
பாக்மதி மண்டலத்தின் மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளில் பக்தபூர் மாவட்டம், தாதிங் மாவட்டம், காத்மாண்டு மாவட்டம், காப்ரேபலாஞ்சோக் மாவட்டம், லலித்பூர் மாவட்டம், நுவாகோட் மாவட்டங்களும் மற்றும் இமயமலைப் பகுதிகளில் ரசுவா மாவட்டம் மற்றும் சிந்துபால்சோக் மாவட்டங்களும் உள்ளது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்


புவியியல்
பாக்மதி மண்டலத்தின் தெற்கில் காட்மாண்டு சமவெளிப் பகுதிகளும், நடுவில் மலைப்பாங்கான குன்றுப் பகுதிகளும், வடக்கில் இமயமலைப் பகுதிகளும் அடங்கியுள்ளது. இம்மண்டலத்தின் இமயமலைப் பகுதியில் 7,000 மீட்டர் உயரத்தில் உள்ள கணேஷ் மலைத் தொடர் உள்ளது. இம்மணடலத்தின் வடக்குப் பகுதி சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியை எல்லையாகக் கொண்டது. [3] இம்மண்டலத்தில் காடுகள் 31.43% ஆகவும், என்றும் பனி படர்ந்த பகுதி 16.63% ஆகவும் உள்ளது. [4]
தட்ப வெப்பம்
இம்மண்டலம் கடல் மட்டத்திலிருந்து காத்மாண்டு சமவெளியில் 300 மீட்டர் முதல் 7,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன்#ஆல்ப்ஸ் மலைக் காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் மற்றும் டிரான்ஸ் - இமயமலை பாலவனக் காலநிலை என ஏழு காலநிலைகளில் காணப்படுகிறது. [5]
சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்
இம்மண்டலத்தில் உலகப் பாரம்பரியக் களங்களான காத்மாண்டு நகரச் சதுக்கம், பக்தபூர் நகர சதுக்கம், பதான் அரண்மனை சதுக்கம், பசுபதிநாத் கோவில் சுயம்புநாதர் கோயில், பௌத்தநாத் மற்றும் லால்டாங் தேசியப் பூங்கா மற்றும் சங்கு நாராயணன் கோயில் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads