மகாபாரத மலைத்தொடர்

இமயமலையின் உட்புற மலைத்தொடர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாபாரத மலைத்தொடர் (Mahabharata Range) (நேபாளி: महाभारत श्रृंखला mahābhārat shrinkhalā) அல்லது சிறிய இமயமலை என அழைக்கப்படும் இம்மலைத்தொடர், வடமேற்கில் காஷ்மீர் முதல் தென்கிழக்கில் பூடான் வரை, 2500 கிலோ மீட்டர் (1550 மைல்) தொலைவிற்கு, கிழக்கு-மேற்காகப் பரவியுள்ள மலைத்தொடர்களாகும். மகாபாரத மலைத்தொடர்கள் 12,000 அடி முதல் 15,000 அடி உயரம் கொண்டது.[1] இம்மலைத்தொடர் சிவாலிக் மலைத்தொடருக்கு இணையாக பரவியுள்ளது.

மகாபாரத மலைத் தொடரில் இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் பகுதிகள் அமைந்துள்ளது.

சிறு தானியங்களும் உருளைக் கிழங்கும் இம்மலைத்தொடர்களில் பயிரிடப்படுகின்றன.

மகாபாரத மலைத்தொடர்களில் திபெத்திய-பர்மியர்கள், நேபாளிகள், பகாரி இந்து மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மகாபாரத மலைத்தொடர்களின் பள்ளத்தாக்குகளின் வழியாக கண்டகி ஆறு, பாக்மதி ஆறு, கோசி ஆறுகள் பாய்கிறது.

கோடை காலத்தில் இம்மலைத்தொடர்களில் 10 முதல் 15 பாகை செல்சியஸ் வெப்பம் உணரப்படுகிறது.

Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads