பாசு-தெர்

From Wikipedia, the free encyclopedia

பாசு-தெர்map
Remove ads

பாசு-தெர் (Basse-Terre, /bæsˈtɛər/, bæss-TAIR; பிரெஞ்சு மொழி: [bɑstɛʁ]) என்பது சிறிய அண்டிலீசில் உள்ள குவாதலூப்பு தீவின் தலைநகரமும், அத்தீவின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். குவாதலூப்பு பிரான்சின் ஆட்சிக்கு உட்பட்டது.[1] இந்நகரம் குவாதலூப்பின் மேற்கு அரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நகர்ப்புறப் பகுதியுடன் சேர்ந்து 2012 இல் 44,864 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது (இவர்களில் 11,534 பேர் பாசு-தெர் நகரில் வாழ்ந்தனர்). இங்கு கால்பந்தாட்டம் பிரபலமான விளையாட்டு ஆகும். வடகிழக்கு மற்றும் வடமேற்கில் சில வேளாண்மை நிலங்களுடன் இந்நகரம் பெரும்பாலும் நகர்ப்புறமாக உள்ளது.[2][3]

விரைவான உண்மைகள் பாசு-தெர்Basse-Terre, நாடு ...
Remove ads

மக்கள்

2017 இல் நகரில் 10,058 மக்கள் இருந்தனர். 2017 இல் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 4,732 ஆகும்.[4] 2007 முதல் மக்கள் தொகை குறைந்து வருகிறது.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...
Remove ads

காலநிலை

பாசு-தெர் ஒரு வெப்பமண்டல மழைக்காட்டுக் காலநிலைக்கும், ஒரு வெப்பமண்டல பருவமழைக் காலநிலைக்கும் இடையே ஒரு இடைநிலை புள்ளியில் உள்ளது. இந்த இரண்டு காலநிலை வகைகளைக் கொண்ட நகரங்களில் வழக்கமாக இருப்பது போல், இந்நகரம் ஆண்டு முழுவதும் ஒப்பீட்டளவில் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், பாசு-தெர், மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads