பாதுகாவலர்கள் மன்றம் (ஈரான்)

From Wikipedia, the free encyclopedia

பாதுகாவலர்கள் மன்றம் (ஈரான்)
Remove ads

பாதுகாவலர்கள் மன்றம் அல்லது அரசியலமைப்புக் குழு (Guardian Council or Constitutional Council) (Persian: شورای نگهبان, romanized: Shūrā-ye Negahbān)[2][3]ஈரான் இசுலாமியக் குடியரசில் கணிசமான அதிகாரத்தையும், செல்வாக்கையும் செலுத்தும் ஒரு நியமிக்கப்பட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இது ஈரானின் அரசியலமைப்பு நீதிமன்றமாகச் செயல்படும். இக்குழு ஒரு செயலர் தலைமையில் செயல்படும்.

விரைவான உண்மைகள் பாதுகாவலர்கள் மன்றம், வகை ...

ஈரானிய அரசியலமைப்பின் படி, இப்பாதுகாவலர்கள் குழுவின் 12 உறுப்பினர்களில் 6 பேர் இசுலாமியச் சமயச் சட்டங்களில் வல்லுராக இருத்தல் வேண்டும். இந்த 6 பேரை ஈரானின் அதியுயர் தலைவர் நியமிப்பார். இசுலாமியச் சமயச் சட்டம் தவிர பிற முக்கிய சட்டங்களின் நிபுனர்களாக உள்ள மீதி ஆறு நபர்களை நாடாளுமன்றத்தின் பரிந்துரையின் படி ஈரானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமிப்பார்.[4]

பாதுகாவலர்கள் மன்றம் என அழைக்கப்படும் அரசியலமைப்புக் குழுவின் முக்கியப் பணி, ஈரான் இசுலாமியக் குடியரசின் அரசியலமைப்பின் நடைமுறையை விளக்குவதாகும்.[5] இம்மன்றத்தின் பிற முக்கியப் பணிகள் ஈரானின் பொதுத் தேர்தல்களை மேற்பார்வை செய்தல் மற்றும் வல்லுநர்கள் மன்றம், ஈரானின் குடியரசுத தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிட ஒப்புதல் அளிக்கும்.[6] மேலும் இந்த மன்றம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள், ஈரானின் அரசியலமைச் சட்டப் பிரிவு 96 மற்றும் 94-இன் படி இசுலாமிய சமய நெறிப் படி உள்ளதா என்பதையும் ஆராயும்.[7]

இம்மன்றம் இசுலாமிய நெறிப்படி, ஈரானின் இசுலாமியச் சட்டங்கள் உள்ளதா என்பதை கீழ்கண்ட வழிகளில் விளக்கும்:

  • ஈரானின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்கிறது.
  • ஈரான் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பான வேட்பாளர்களின் கண்காணிப்பை மேற்பார்வையிடுகிறது மற்றும் தேசிய அலுவலகத்தை யார் இயக்க முடியும் மற்றும் இயங்க முடியாது என்பதை தீர்மானிக்கிறது [8]
  • சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களையும், மிகவும் பிரபலமானவர்களையும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுவதற்கு மறுக்கப்படுகிறது [9]
  • தகுதி நீக்கம் (வீட்டோ) செய்யப்படாத சட்டங்கள் நாடாளுமன்றம் இயற்றுகிறதா என்பதை கண்காணிக்கும். [10][11]
  • இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தாக்கம் ஈரான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டில் உள்ளதா என்பதை ஆராயும.
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads