பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்)

From Wikipedia, the free encyclopedia

பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்)map
Remove ads

பாபநாசம் (ஆங்கிலம்:Papanasam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஓர் ஊர் ஆகும். பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.7°N 77.38°E / 8.7; 77.38 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

2001 இல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 614 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் ஆண்கள் 312, பெண்கள் 302 ஆவார்கள். பாபநாசம் மக்களின் சராசரி கல்வியறிவு 84.39% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 78% விட கூடியதே. பாபநாசம் மக்கள் தொகையில் 11.43% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், பாபநாசம், மாதம் ...
Remove ads

பாபநாசநாதர் கோயில்

இவ்வூரில் பாண்டிய அரசர்களால் கட்டப்பட்டு, நாயக்க மரபு அரசர்களால் விரிவாக்கப்பட்ட பழம்பெரும் பாபநாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு வைப்புத் தலமாகும்.

இறைவர்  : பாவநாசர், பாபவிநாசகர்.
இறைவியார்  : லோகநாயகி, உலகம்மை.
தல மரம்  : களா மரம்.
தீர்த்தம்  : தாமிரபரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம்.

வழிபட்டோர்  : அகத்தியர்.

வைப்புத்தலப் பாடல்கள்  :
  • சம்பந்தர் - பொதியிலானே பூவணத்தாய் (1-50-10), அயிலுறு படையினர் (1-79-1)
  • அப்பர் - தெய்வப் புனற்கெடில (6-7-6), உஞ்சேனை மாகாளம் (6-70-8).
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads