பாரதியார் பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982-இல் உருவானது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது.

இப் பல்கலைக் கழகத்தின் கீழ், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள, 133 அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார்க் கல்லூரிகள் செயல்படுகின்றன. [2]
Remove ads
பல்கலைக்கழகத் துறைகள்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 துறைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 54 பட்ட மேற்படிப்புகளும் முதுதத்துவமாணி, முனைவர் பட்ட ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.
- தமிழ்த் துறை
- ஆங்கிலத்துறை
- மொழியியல் துறை
பாரதியார் பல்கலைக்கழக முதுநிலை பட்ட விரிவாக்க மையம்
பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்ட விரிவாக்க மையம் 2013-ஆம் ஆண்டு முதல் ஈரோடு பகுதியில் தனியாகச் செயல்பட்டு வருகிறது. இங்குப் பல முதுநிலைப் பட்ட மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் மற்றும் பிற சேவைகளும் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள்
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 133 உறுப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன, அதில் 13 அரசுக் கல்லூரிகள், 1 வான்படை நிர்வாகக் கல்லூரி, 3 இணைக் கல்லூரிகள், 1 பல்கலைக்கழகம், 16 அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் 99 சுயநிதி கல்லூரிகள். [3] செயல்பட்டு வருகின்றன.
அரசுக் கல்லூரிகள்
- சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூர்
- அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அவிநாசி
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூடலூர்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையம்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்லடம்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திட்டமலை
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வால்பாறை
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காங்கேயம்
- அரசு கலைக் கல்லூரி, உதகமண்டலம்
- அரசு கலைக் கல்லூரி, உடுமலைப்பேட்டை
- எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருப்பூர்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புலியகுளம்
Remove ads
அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள்
- சிபிஎம் கல்லூரி, கோயம்புத்தூர்
- சிக்கய்யா நாயக்கர் கல்லூரி, ஈரோடு
- எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி, உதகமண்டலம்
- பெண்களுக்கான பிராவிடன்ஸ் கல்லூரி, குன்னூர்
- ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு
- தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ் கல்லூரி, கோவை
- ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
- நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி
- நிர்மலா மகளிர் கல்லூரி
- பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
- பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்
- ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
- வேளாளர் மகளிர் கல்லூரி
Remove ads
தரவரிசை
பாரதியார் பல்கலைக்கழகம் 2020-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்படி இந்திய அளவில் 21-ஆவது இடத்தை பெற்றுள்ளது. [4]
பல்கலைக்கழக விடுதிகள்
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
- என்று பாடிய அனுபவ மொழிகளை உதிர்த்த பாரதியின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தில்,
- இளங்கோ விடுதி
- கம்பர் விடுதி
- திருவள்ளுவர் விடுதி
- சேக்கிழார் விடுதி
- செல்லம்மாள் விடுதி
- கண்ணம்மாள் விடுதி
- ஆசிரியர் விடுதி
- எஸ். சி. மகளிர் விடுதி
போன்ற விடுதிகள் உள்ளன.
நூலகம்:
முதுகலை , முதுனிலை மாணவர்களுக்கும், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மற்றும் முதுமுனைவர் ஆய்வாளர்களுக்கும் தேவையான நூல்களைக் கொண்ட சிறந்த நூலக வசதியும் உள்ளது. இங்கு பன்னாட்டு மாணவர்களும் கற்கும் வண்ணம் வாசிப்பு அறை உள்ளது. நூலகம் கணினிமயப்படுத்தப்பட்டுள்ளதால் பயனர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களின் இருப்புநிலையை அறிந்துகொள்ள (கணினி மென்பொருள் வழி) முடிகிறது. இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளோர் நூல்களைத் தக்க ( அனுமதியுடன்) எடுத்துச் செல்ல முடியும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads