பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (Bharatiya Janata Yuva Morcha) ( BJYM ) ( மொழிபெயர்ப்பு : இந்திய மக்கள் இளைஞர் முன்னணி) என்பது பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவாகும். பெங்களூரு தெற்கு மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தற்போது இதன் தலைவராக இருக்கிறார். இது 1978இல் நிறுவப்பட்டது. தேசியத் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா இதன் முதல் தலைவராக இருந்தார்.

விரைவான உண்மைகள் தலைவர், தலைமையகம் ...
Remove ads

அமைப்பு

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பைப் போன்றே பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவும் ஒரு நிறுவன அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மிக உயர்ந்த அதிகாரமாக அதன் தேசிய தலைவர் இருக்கிறார். 2020 முதல் தேஜஸ்வி சூர்யா தலைவராக இருக்கிறார்.[1] கல்ராஜ் மிஸ்ரா, பிரமோத் மகாஜன், ராஜ்நாத் சிங், ஜி. கிஷன் ரெட்டி, ஜெகத் பிரகாஷ் நட்டா, உமா பாரதி, சிவராஜ் சிங் சௌகான், தர்மேந்திர பிரதான், அனுராக் தாகூர் பூனம் மகாஜன் போன்ற முக்கிய தலைவர்கள் கடந்த காலங்களில் இதன் தேசியத் தலைவராக பணியாற்றியுள்ளனர்.[2]

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய குழுவில் தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், சமூக ஊடகங்கள் & தகவல் தொழில்நுட்பப் பொறுப்பாளர்கள் ,தேசிய நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர். [3]

Remove ads

பிரச்சாரங்கள்

கேலோ பாரத் [4]

மில்லினியம்[5]

விஜய் இலக்சயா 2019[6]

முந்தைய தலைவர்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் வருடம், பெயர் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads