அனுராக் தாகூர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

அனுராக் தாகூர்
Remove ads

அனுராக் சிங் தாகூர் (பிறப்பு: அக்டோபர் 24, 1974) இமாச்சலப் பிரதேசத்தில் ஹமீர்பூரிலிருந்து இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றுகிறார். இவர் இமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமால் என்பவரின் மகன் ஆவார். பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக, 2008 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இடைத்தேர்தலில் வென்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அதைத்தொடர்ந்து வந்த 4 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற இவர் 14, 15, 16, மற்றும் 17 வது மக்களவை உறுப்பினராக உள்ளார்.

விரைவான உண்மைகள் அனுராக் தாகூர், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ...

இவர் தற்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் மற்றும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சராக உள்ளார்.

2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பிப்ரவரி 2017 வரை பி.சி.சி.ஐயின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் இருந்தார். பிறகு உச்ச நீதிமன்றம் அவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினார்.[2] 2016 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி, பிராந்திய இராணுவத்தில் வழக்கமான ஆணையராக இருக்கும் முதல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெயரைப் பெற்றார்.[3]

Remove ads

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தாக்கூர் 24 அக்டோபர் 1974ஆம் ஆண்டு ஹமீர்பூரில் பிறந்தார். அவர் பிரேம் குமார் துமால் மற்றும் ஷீலா தேவி ஆகியோரின் மூத்த மகன்.[4] அவர் ஜலந்தர் தயானந்த் மாடல் பள்ளியில் படித்தார். தொடர்ந்து ஜலாந்தர் டாகா கல்லூரியில் தனது பி.ஏ. படிப்பை முடித்தார்.  

அரசியல் வாழ்க்கை

மே மாதம் 2008 இல், தன் தந்தையின் தொகுதியான ஹமீர்பூர் தொகுதியில் இருந்து இந்தியாவின் 14 வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ல் 15 வது மக்களவை, 2014 ல் 16 வது மக்களவை, 2019 ல் 17 வது மக்களவை ஆகியவற்றிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், தாகூர் அகில இந்திய பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5][6]

தாகூர், மே மாதம் 2019 ல், நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சரானார்.[7]

Remove ads

கிரிக்கெட் வாழ்க்கை

2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜம்மு & காஷ்மீருக்கு எதிரான ஒரு ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார். முன்பாக அவர் ஹெச்பிஎசியின் தலைவராக இருந்தபோது, அவரை HPCA ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக தன்னை நியமித்துக் கொண்டார். இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாவதற்கு அவர் உதவினார். இமாச்சலப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார், மேலும் 2000-2001 காவக்கட்டத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் அணிக்கு கேப்டனாக அணிக்கு தலைமை தாங்கினார். அதில் ஜம்மு-காஷ்மீர் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.[8]

கிரிக்கெட் நிர்வாகி

இந்திய உச்ச நீதிமன்றம் 02/01/2017 அன்று தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை தாகூர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக இருந்தார். 2000 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியை ஏற்ற பிறகு, முதல்-வகுப்பில் அறிமுகமான முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த முதல் டெஸ்ட் அவரது முதல் மற்றும் ஒரே ஒரு முதல்-வகுப்பு கிரிக்கெட் போட்டியாக இருந்தது. முதல் வகுப்பு கிரிக்கெட்டில் இந்த அனுபவம் BCCI தேசிய ஜூனியர் தேர்வுக் குழுவில் அவரது நிலையை உயர்த்தியது, ஏனெனில் முதல் வகுப்பு வீரர்கள் மட்டுமே தேசிய தேர்வாளர்களாக இருக்க முடியும்.[9]

பி.சி.சி.ஐ.யின் செயலர் பதவியில் இருந்து தாகூர் தொடர்ந்து பதவி உயர்வடைந்துள்ளார்.[10] 2016 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி, பி.சி.சி.ஐ. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்கூர், ஜனவரி 2017 ல் உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டார்.[11]

இவர் தாகூர் மகளிர் அறக்கட்டளையின் (HOW) நிறுவனர் ஆவார். இது பெண்கள் விவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிக்கும் கருத்தரங்குகள், தெரு நாடகங்கள் மற்றும் பல சிவில் சமுதாய பங்குதாரர்கள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் சமூக விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகும்.

Remove ads

பிராந்திய இராணுவம்

2016 ஆம் ஆண்டு ஜூலையில், பிராந்திய இராணுவத்தில் சேர்ந்தார், இதன்மூலம் பிராந்திய இராணுவத்தில் வழக்கமான ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரானார்.[12]

தனிப்பட்ட வாழ்க்கை

27 நவம்பர் 2002 இல், ஹிமாச்சலப் பிரதேச அரசாங்கத்தின் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான குலாப் சிங் தாக்கரின் மகள் ஷெபலி தாக்கூர் என்பவரை தாகூர் திருமணம் செய்தார்..[13][14][15][16]

இதனையும் காண்க

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads