பாரத்மாலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரத்மாலா (Bharatmala) என்பது மோடி அரசாங்கத்தின் இலட்சியச் சாலை மேம்பாட்டுச் செயற்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும்.[1] இச்செயற்திட்டம் குசராத் மற்றும் இராசத்தான் மாநிலங்களில் தொடங்கி பஞ்சாப் சென்று பின்னர் சரம் போன்ற இமாலய மாநிலங்களான சம்மு காசுமீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டம் ஆகிய மாநிலங்களை இணைத்து பின்னர் உத்தரப் பிரதேசம், பீகார் தெராய் நிலப்பரப்பு வழியாகச் சென்று சிக்கிம், அசாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர், மிசோரம் மாநிலங்களின் வலதுபுறமாக இந்தியா – மியான்மர் எல்லை வரைக்கும் செல்கிறது.
Remove ads
நிதி
இச்சாலை மேம்பாட்டுச் செயற்திட்டத்திற்கு சுமார் ₹500 பில்லியன் அதாவது 7.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு பிடிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது..[2]
முன்னேற்றம்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ₹ 2.6 லட்சம் கோடி மதிப்புடைய பாரத்மாலா செயற்திட்டத்திற்கான ஒரு வரைவு அமைச்சரவை குறிப்பு தயார் செய்துள்ளது. ஆழ்ந்த சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தில் இந்தியா எல்லைப் பகுதிகள், கடலோர பகுதிகள், துறைமுகங்கள், மத மற்றும் சுற்றுலாத் தலங்கள் இவற்றுடன் 100 மாவட்டத் தலைமையிடங்கள் ஆகியனவற்றை இணைக்கும் 25,000 கி.மீ. நீளமுள்ள சாலை அமைப்பை எதிர்நோக்கும் விரிவானதொரு திட்டமாக விளங்குகிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads