பார்பேட்டா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பார்பேட்டா (Barpeta) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பார்பேட்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான கவுகாத்தி நகரத்திற்கு வடமேற்கில் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 114 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
புவியியல்
கடல் மட்டத்திலிருந்து 114 அடி உயரத்தில் உள்ள இந்நகரத்திற்கு அருகில் மானசு தேசியப் பூங்கா மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றின் மூன்று கிளை ஆறுகள் பாய்கிறது. [1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 22 பகுதிகளும், 9,230 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 42,649 பேராகும். அதில் 21,241 ஆண்களும் மற்றும் 21,408 பெண்களும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3673 (8.61%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.77% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 90.64%, முஸ்லீம்கள் 9.25% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.
Remove ads
தொடருந்துகள்
பார்பேட்டா தொடருந்து நிலையம், கவுகாத்தி, கொல்கத்தா, அகர்தலா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் தில்லி, மும்பை, திருவனந்தபுரம், அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. [2]
தட்பவெப்பம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads