பார்மால்டிகைடு

From Wikipedia, the free encyclopedia

பார்மால்டிகைடு
Remove ads

பார்மால்டிகைடு (Formaldehyde) என்பது CH2O (H−CHO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இயற்கையில் கிடைக்கும் இக்கரிமச் சேர்மம் ஓர் எளிய ஆல்டிகைடுக்கு எடுத்துக்காட்டு ஆகும். பார்மிக்காடியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் பார்மால்டிகைடு என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

பல்வேறு வேதிச் சேர்மங்களின் தயாரிப்புக்கு பார்மால்டிகைடு ஒரு முன்னோடிச் சேர்மமாக உள்ளது. 1996 ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்டுக்கு 8.7 மில்லியன் டன் பார்மால்டிகைடு உற்பத்தி செய்யப்பட்டது [11]. குறைந்த அடர்த்தி மரப்பலகை மற்றும் வண்ணப்பூச்சுகளுக்கான தொழிற்சாலை பிசின்கள் தயரிப்பில் பார்மால்டிகைடு முக்கியமாகப் பயன்படுகிறது.

பரவலாகப் பயன்பாட்டில் உள்ளதால் இதன் நச்சுத்தன்மையும் எளிதில் ஆவியாகும் தன்மையும் மனித உடல் நலத்திற்கு குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது [12][13]. பார்மால்டிகைடு சேர்மத்தால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்காவின் தேசிய நச்சுயியல் அமைப்பு 2011 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது [14][15][16].

Remove ads

வரலாறு

முதன் முதலாக இரசிய வேதியியலாளா் அலெக்சாண்டா் புட்லெரோவ் (1828–86) என்பவரால் பார்மால்டிகைடு என்ற சேர்மத்தின் இருப்பு அறிவிக்கப்பட்டது. (1828–86) ஆனால், இவர் பார்மால்டிகைடை டை-ஆக்சிமெதிலீன் என அழைத்தாா்.[17] இறுதியாக ஆகஸ்ட் வில்லெம் வான் ஆபுமன் என்பவரால் பார்மால்டிகைடின் சரியான வடிவம் மற்றும் தயாாிப்பு 1869 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.[18][19]

பார்மால்டிகைடின் வடிவங்கள்

பல எளிய கார்பன் சோ்மங்களோடு ஒப்பிடும் போது பார்மால்டிகைடு சற்றே சிக்கலான வெவ்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளது. ஒரு வளிமமாக பார்மால்டிகைடு நிறமற்ற வளிமமாகும். காரமான எரிச்சலூட்டும் மணம் இச்சேர்மத்தை அடையாளப்படுத்துகிறது. ஒடுக்கும் வினைக்கு உட்படுத்தும்போது இவ்வாயு பார்மால்டிகைடின் வெவ்வேறு மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பிற வடிவங்களாக மாறுகிறது. இவையனைத்தும் பல்வேறு நடைமுறை பயன்களைக் கொண்டுள்ளன. 1,3,5-டிரையாக்சேன் எனப்படும் வளைய முப்படி மெட்டா பார்மால்டிகைடு ஒரு முக்கியமான பார்மால்டிகைடு வழிப்பெறுதியாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு (CH2O)3 ஆகும். பாராபார்மால்டிகைடு என்ற நேரியல் பலபடியும் நன்கு அறியப்படுகிறது. இச்சேர்மங்கள் யாவும் ஒத்த வேதியியல் பண்புகளையும் பெரும்பாலும் ஒன்றுக்கு மாற்றாக மற்றொரு சேர்மத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் உள்ளன.

Thumb
தொழில்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படும் பார்மால்டிகைடின் பொது வடிவமான பாராபார்மால்டிகைடு

பார்மால்டிகைடை நீரில் கரைக்கும் போது மெத்தேன்டையால் என்ற நீரேற்றாக உருவாகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு H2C(OH)2 ஆகும். இக்கரைசலின் செறிவு மற்றும் வெப்பநிலைக்கு ஏற்ப இச்சேர்மம் பல்வேறு வகையான சில்படிமங்களாக காணப்படுகிறது. 40 சதவீத பார்மால்டிகைடை கொண்ட பூரித நீர்க்கரைசல் அல்லது நிறையளவில் 37 சதவீத அளவு கொண்ட பார்மால்டிகைடு கரைசல் 100 சதவீத பார்மலின் என்று அழைக்கப்படுகிறது. மெத்தனால் போன்ற நிலைப்படுத்தி கரைசலுடன் சிறிதளவு சேர்க்கப்பட்டு ஆக்சிசனேற்ற வினையும் பலபடியாதல் வினையும் அடக்கப்படுகிறது. வணிகரீதியிலான பார்மலின் 10–12% மெதனாலைக் கொண்டிருக்கிறது. பார்மலின் என்ற வணிகப் பெயரானது வணிகரீதியில் மிக நீண்ட நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது[20]

Remove ads

தோற்றம்

சுற்றுச்சூழலிலுள்ள மொத்த பார்மால்டிகைடு அளவில் 90% வரை மேல் வளிமண்டலத்திலுள்ள செயல்முறைகள் மூலம் பங்களிக்கப்படுகின்றன. காட்டுத்தீ, வாகனப் புகை, புகையிலை புகை போன்ற கார்பன் சேர்மங்கள் மற்றும் மீத்தேனின் ஆக்சிசனேற்றம் அல்லது மீத்தேன் எரிப்பு வினையில் பார்மால்டிகைடு ஓர் இடைநிலை விளைபொருளாகும். வளிமண்டலத்திலுள்ள மீத்தேன் மற்றும் பிற ஐதரோகார்பன்கள் மீது சூரிய ஒளி, ஆக்சிசன் ஆகியவற்றின் வினையால் பார்மால்டிகைடு வளிமண்டலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பனிப்புகையின் ஒரு பகுதியாக பார்மால்டிகைடு உருவாகிறது.

விண்வெளிக்கு அப்பாலுள்ள புறவெளியிலும் பார்மால்டிகைடு கண்டறியப்பட்டுள்ளது.

பார்மால்டிகைடும் அதன் கூட்டுசேர்க்கை பொருள்களும் உயிரினங்களில் எங்கும் காணப்படுகின்றன. மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் இரத்த ஓட்டத்தில் சுமார் 0.1 மில்லிமோலார் செறிவு பார்மால்டிகைடு காணப்படுகிறது [21].

தொழில்முறை தயாாிப்பு

பாா்மால்டிகைடானது தொழில் முறையில் மெத்தனால் -இனை வினைவேக மாற்றி முன்னிலையில் ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் தயாாிக்கப்படுகிறது. இந்த வினையில், வெள்ளி உலோகம் அல்லது இரும்பு ஆக்சைடு மற்றும் மாலிப்டினம் ஆக்சைடு கலந்த கலவை அல்லலது வெனடியம் பெண்டாக்சைடு ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் வினைவேக மாற்றிகளாகும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் பார்மாக்சு வினையில் மெத்தனால் மற்றும் ஆக்சிசன் ஆகியவை ca. 250–400 °C வெப்பநிலையில் மாலிப்டினம் மற்றும் வெனடியம் உடன் இரும்பு ஆக்சைடு அல்லது வெனடியம் உடன் இரும்பு ஆக்சைடு முன்னிலையில் பின்வரும் வேதிச்சமன்பாட்டின்படி வினைபுாிந்து பார்மால்டிகைடைத் தருகின்றன. :[11]

2 CH3OH + O2 → 2 CH2O + 2 H2O

வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட வினைவேகமாற்றி முன்னிலையில் பொதுவாக உயா் வெப்பநிலையில் (அதாவது 650 °C) மேலே குறிப்பிடப்பட்ட வேதிவினையும், ஹைட்ரஜன் நீக்க வினையும் ஒரே நேரத்தில் நடைபெற்று பார்மால்டிகைடைத் தருகிறது.

CH3OH → CH2O + H2

கொள்கை அளவில் பார்மால்டிகைடை மீத்தேனை ஆக்சிசனேற்றம் செய்தும் பெற முடியும். ஆனால், தொழில் முறையில் மீத்தேனை ஆக்சிசனேற்றம் செய்வதை விட மெத்தனாலை ஆக்சிசனேற்றம் செய்வது எளிதானதாக இருக்கிறது.

Remove ads

தொழிற்துறை பயன்கள்

பார்மால்டிகைடானது பல சிக்கலான சோ்மங்கள் மற்றும் பொருட்களின் பொதுவான முன்னோடி சோ்மமாக உள்ளது. யூாியா பார்மால்டிகைடு பிசின், மேலமைன் பிசின், பீனால் பார்மால்டிகைடு பிசின், பாலிஆக்சிமெதிலீன் நெகிழிகள், 1,4-பியூட்டேன்டையால் ஆகியவை பார்மால்டிடைட்டிலிருந்து பெறப்படும் சிக்கலான பொருட்களாகும்.[11] ஜவுளித்துறையில் பார்மால்டிஹைடை அடிப்படையாகக் கொண்ட பிசின்களை துணிகளை இறுதி செய்யும் பணியில் துணிகளில் கறை படியாமல் இருக்கச் செய்வதற்காக பயன்படுத்துகின்றனா்.[22] பார்மால்டிகைடை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் தானியங்கி வாகனங்களின் உற்பத்திக்கு முக்கியமான ஒலிபரப்பு, மின் அமைப்பு, இயந்திர தொகுதி, கதவு பேனல்கள், அச்சுகள் மற்றும் நிறுத்த மிதி ஆகியவற்றிற்கான கூறுகளை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. 2003 ஆம் ஆண்டில் பார்மால்டிஹைடு மற்றும் அதன் வழிப்பொருட்களின் தயாரிப்புகளின் விற்பனை மதிப்பு 145 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது, அமெரிக்கா மற்றும் கனடா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% ஆக இருந்தது. மறைமுக வேலைவாய்ப்பு உட்பட, அமெரிக்க மற்றும் கனடாவில் 11,900 ஆலைகளில், சுமார் 4 மில்லியன் மக்களுக்கு பார்மால்டிகைடு தொழிலில் வேலைவாய்ப்பு கிடைத்தது.[23]

Thumb
யூரியா-ஃபார்மால்டிகைடு பிசின் உருவாவதற்குரிய இரண்டு படிகள், இது துகள் பலகை உற்பத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பார்மால்டிகைடை பீனால், யூரியா, மேலமீன், ஆகியவற்றுடன் வினைப்படுத்தும் போது முறையே, வெப்பத்தால் இறுகும் பீனால் பார்மால்டிகைடு பிசின், யூாியா பார்மால்டிஹைடு பிசின், மேலமீன் பிசின் ஆகியவை உருவாக்கப்படுகின்றன. இந்தப் பலபடி மூலக்கூறுகள் ஒட்டுபலகைகள் மற்றும் கம்பளவிாிப்புகளுக்கான பொதுவான மற்றும் நிரந்தரமான ஒட்டும் பசைகளாகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads