1,3,5-டிரையாக்சேன்

அமில வினையூக்கிகளைப் பயன்படுத்தி பார்மால்டிகைடை முப்படியாக்கம் செய்து டிரையாக்சேனைத் தயார From Wikipedia, the free encyclopedia

1,3,5-டிரையாக்சேன்
Remove ads

1,3,5- டிரையாக்சேன் (1,3,5-Trioxane) என்பது C3H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரையாக்சேன் அல்லது டிரையாக்சின் அல்லது மூவாக்சேன் என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். குளோரோபார்ம் போன்ற வாசனையுடன் வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக டிரையாக்சேன் காணப்படுகிறது. பார்மால்டிகைடின் நிலையான வளைய முப்படியாகவும் டிரையாக்சேனின் மூன்று மாற்றியன்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. டிரையாக்சேன் மூலக்கூற்று கட்டமைப்பு ஆறு உறுப்பு வளையமாக அமைந்துள்ளது. மூன்று கார்பன் அணுக்களும் மூன்று ஆக்சிசன் அணுக்களும் ஒன்று விட்டு ஒன்றாக மாறிமாறி இடம்பெற்றுள்ளன. இதனால் பார்மால்டிகைடு வளைய முப்படியாதல் மூலம் 1,3,5-டிரையாக்சேனைக் கொடுக்கிறது.

Thumb
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

Thumb

அமில வினையூக்கிகளைப் பயன்படுத்தி பார்மால்டிகைடை முப்படியாக்கம் செய்து டிரையாக்சேனைத் தயாரிக்கிறார்கள். அடர்த்தியான நீரிய கரைசலில் வினை நடைபெறுகிறது. விளைபொருள் கரைப்பானைக் கொண்டு பிரித்தெடுக்கப்படுகிறது. வினை வழிமுறை கீழே கொடுக்கப்படுகிறது.

பயன்கள்

பாலியாக்சிமெத்திலீன் நெகிழிகளுக்காக டிரையாக்சேன் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மொத்தமாக உற்பத்தி செய்யப்படும் டிரையாக்சேனில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் அளவு இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது [2]. பார்மால்டிகைடை வெளியீட்டுப் பயன்படுத்தும் போக்கைப் பிற பயன்பாடுகள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் இதை மர, நெசவுத் தொழிலில் ஒரு சேர்ப்பியாகப் பன்படுத்துகிறார்கள். டிரையாக்சேனை எக்சமீனுடன் இணைத்து சமையல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஆய்வகங்களில் பார்மால்டிகைடின் நீரிலி மூலமாக டிரையாக்சேன் பயன்படுகிறது[3].

Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads