பார்மேர் மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பார்மேர் மாவட்டம்
Remove ads

பார்மேர் மாவட்டம் (Barmer District - बाडमेर जिला), மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பார்மேர் ஆகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Thumb
இராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டத்தின் அமைவிடம்

இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதியில் அமைந்த இம்மாவட்டம்[1] ஜோத்பூர் கோட்டத்தில் உள்ளது.

நிலப்பரப்பில் பார்மர் மாவட்டம், இராஜஸ்தான் மாநிலத்தின் மூன்றாவதும், இந்திய மாவட்டங்களில் ஐந்தாவது பெரிய மாவட்டமாகும்.[2]

இம்மாவட்டத்தில் அண்மையில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]

Remove ads

நிலவியல்

Thumb
பார்மர் நகரத்திற்கு அருகே தார் பாலைவனத்தின் மணற்பரப்பு

தார் பாலைவனத்தின் மேற்கு பகுதியில் அமைந்த பார்மர் மாவட்டத்தின் வடக்கில் ஜெய்சல்மேர் மாவட்டம், தெற்கில் ஜாலாவார் மாவட்டம், கிழக்கில் ஜோத்பூர் மாவட்டம் மற்றும் பாலி மாவட்டம், மேற்கில் பாகிஸ்தான் எல்லைகளாகக் கொண்டது.

இம்மாவட்டத்தில் பாயும் 480 கிலோ மீட்டர் நீளம் கொண்ட லூனி ஆறு, ஜாலாவார் மாவட்டம் வழியாக கட்ச் வளைகுடாவில் கலக்கிறது.

இம்மாவட்டத்தின் கோடைகால வெப்பம் 46 °C முதல் 51 °C முடிய வரை உள்ளது. குளிர்காலத்தில் வெப்பநிலை பூஜ்ஜியம் பாகைக்கு கீழ் செல்கிறது. ஆண்டு சராசரி மழை அளவு 277 மிமீ ஆகும்.

Remove ads

பொருளாதாரம்

இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக இம்மாவட்டத்தையும் 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது.[4]

மாவட்ட நிர்வாகம்

பார்மர் மாவட்டம் பார்மர், பைத்தூ, சோதான், குடா மாலினி, பஞ்சபத்திரா, ராம்சர், சியோ மற்றும் சிவானா என எட்டு வருவாய் வட்டங்களையும்; 17 ஊராட்சி ஒன்றியங்களையும், 2160 கிராமங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,603,751 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 93.02% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 6.98% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 32.52%% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,369,022 ஆண்களும்; 1,234,729 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 902 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 28,387 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 56.53% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 70.86% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 40.63% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 501,522 ஆக உள்ளது. [5]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,244,882 (86.22 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 321,192 (12.34 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை ()ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 34,010 (1.31 %) ஆகவும்; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

Remove ads

மாவட்டப் பிரிப்பு

இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிய பலோத்ரா மாவட்டம் நிறுவப்பட்டது.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads