பாறைக் குவிமாடம்

From Wikipedia, the free encyclopedia

பாறைக் குவிமாடம்map
Remove ads

பாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதத் தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். உமையா கலீபகம் அப்ட் அல்-மலீகினால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டடம் பல தடவைகள் புதுப்பித்தலுக்கு உள்ளானது. இதன் இதயப் பகுதியாகிய அத்திவாரப் பாறை சமயங்களின் பாரம்பரியங்களிற்கு முக்கிய அடிப்படையாகவுள்ளது.

விரைவான உண்மைகள் பாறைக் குவிமாடம் (Dome of the Rock), அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

இடம், கட்டுமானம், பரிமாணம்

பாறைக் குவிமாடம் கோவில் மலை எனப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இது கி.பி. 70 இல் உரோமப் படை மேற்கொண்ட எருசலேம் முற்றுகையின்போது அழிக்கப்பட்ட இரண்டாம் கோவில் (யூதம்) அமைந்த இடத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. கி.பி. 637 இல் யெரூசலேம் கலிப்பா படையிடம் வீழ்ச்சியடைந்தது.

இக் கட்டடம் கலிபா ஒமர் இபின் அல் கட்டாப்பினால் யூத போதகராக இருந்து மதம் மாறிய காஃப் அல் அக்பரின் ஆலோசனையுடன் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 689 – 691 காலப் பகுதியில் இது கட்டப்பட்டது. யசிட் இபன் சலாம் மற்றும் ராஜா இபன் கேவா ஆகியோர் பொறியியலாளர்களாக இருந்தனர். இக் கட்டடம் எண்கோண வடிவம் உடையது. ஏறக்குறைய 20 மீட்டர் விட்டமுடைய மரத்தினால் ஆன குவிமாடம் 16 தூண்கள் மேல் உள்ளது.[1] வெளிப் பக்கச் சுவர் பீங்கானிலால்[2] ஆக்கப்பட்டு எண்கோணத்தை பிரதிபலிக்கச் செய்கிறது. ஒவ்வொன்றும் ஏறக்குறைய 60 அடி அகலமும், 36 அடி உயரமும் கொண்டது. குவிமாடமும் வெளிச்சுவரும் பல யன்னல்களையுடையன.[1]

குவிமாடம்

வெளிப்புறம்

குவிமாடம் வடிவம் பைசாந்திய வேத சாட்சிகளில் கல்லறை வடிவத்தை ஒத்தது. சுலைமான் காலத்தில் குவிமாடத்தின் வெளிப்புறம் மட்பாண்டம் செய்யப் பயன்படும் ஒருவித பொருளின் ஓடுகளினால் மூடப்பட்டிருந்தது. இதை முடிப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆயின. பின்னர், பிரித்தானியாவினால் ஹச் அமின் அல் குசைன் பாறைக் குவிமாடத்தை புணருத்தாரனம் செய்ய நியமிக்கப்பட்டார்.

1955 இல் அராபிய அரசாங்கங்கள் மற்றும் துருக்கியின் நிதியுதவிடன் யோர்தான் அரசாங்கம் புதுபித்தலை மேற்கொண்டது. இவ் வேலையானது சுலைமான் காலத்து ஓடுகளை மாற்றுவதாக இருந்தது. ஏனென்றால் அவை பெரு மழையினால் நகரத் தொடங்கின. 1965 இல் புணருத்தானத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் தயாரிக்கப்பட்ட உறுதியான அலுமியம் மற்றும் வெண்கலம் கலப்பு உலோகத்தினால் குவிமாடம் மூடப்பட்டது.[3] 1993 இல் 80 கிலோ தங்கத்தினால் குவிமாடம் மூடப்பட்டது. இதற்காக யோர்தானிய மன்னர் குசைன் அவருடைய இலண்டன் வீடுகளை விற்று 8.2 மில்லியன் டாலர் அன்பளிப்பு செய்தார்.

உட்புறம்

உட்புறம் அதிகளவு சித்திர வேலைப்பாடுகள், பீங்கான் மட்பாண்டம், சலவைக் கல் என்பனவற்றைக் கொண்டு காணப்படுகிறது. இவை கட்டி முடிக்கப்பட்டு சில நூற்றாண்டுகளின் பின்னரே சேர்க்கப்பட்டன. இங்கு குரான் எழுத்துக்களும் காணப்படுகின்றன.

Remove ads

வரலாறு

ஆரம்பம்

Thumb
இரண்டாம் கோவில் (எருசலேம் புனித பூமியின் மாதிரி, 1966)

பாறைக் குவிமாடம் கோவில் மலையின் மையத்தில் அமைந்துள்ளது. இங்குதான் சாலமோனின் கோவில் மற்றும் யூதர்களின் இரண்டாம் கோவில் என்பன காணப்பட்டன. இதில் இரண்டாம் கோவில் முதலாம் ஏரோது காலத்தில் கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் பாரிய வரிவாக்கலுக்கு உள்ளானது. ஏரோதின் கோயில் உரோமர்களால் கி.பி. 70 இலும் கி.பி 135 இல் இடம்பெற்ற புரட்சியின் பின்னும் அழிக்கப்பட்டு, உரோமர்களின் கோயில் அவ்விடத்தில் யூலியஸ் கபிடோலினசினால் கட்டப்பட்டது.[4]

எருசலேம் கிறிஸ்தவ பைசாந்தியப் பேரரசுவினால் 4 முதல் 6 வரையான காலப்பகுதியில் ஆளப்பட்டது. இக்காலத்தில் கிறிஸ்தவ யாத்திரிகள் எருசலேமுக்குச் செல்வது வளர்ச்சியடைந்தது.[5] திருக்கல்லறைத் தேவாலயம் கொண்டான்டைனினால் 320 களில் கட்டப்பட்டது. ஆனால் கோவில் மலை யூலியன் பேரரசர் காலத்தில் புணரமைக்கும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்யாமல் கைவிடப்பட்டது.[6]

சிலுவைப் போர் வீரர்கள்

சிலுவைப் போர் வீரர்கள் காலத்தில் பாறைக் குவிமாடம் கிருத்தவ துறவிகளிடம் கொடுக்கப்பட்டு கிருஸ்தவ தேவாலயமாக மாற்றப்பட்டிருந்தது. பாறைக் குவிமாடம் சலமோன் கட்டிய தேவாலயம் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என நைட் டெம்பிளர் நம்பினர். 12ம் நூற்றாண்டில் நைட் டெம்பிளருடைய தலைமையகமாக அல் அக்சா பள்ளிவாசல் காணப்பட்டது. இதற்கு முன் அல் அக்சா பள்ளிவாசல் அரச குதிரைகளின் இலாயமாக இருந்தது. சலமோன் கட்டிய யூத தேவாலய மாதிரி ஐரோப்பாவிலிருந்த தேவாலயங்களின் கட்டிட மாதிரியாக அக்காலத்தில் அமைந்தது.

அயூபிட் மற்றும் மம்லுக்

சலாதீனால் 1178 இல் மீண்டும் யெரூசலேம் கைப்பற்றப்பட்டது. பாறைக் குவிமாடம் மேல் இருந்த சிலுவைக்குப் பதிலாக பொன் பிறை வைக்கப்பட்டது. பாறைக்கு கீழ் மர யன்னல்கள் வைக்கப்பட்டன.

உதுமானிய பேரரசு 1517–1917

பாரியளவிலான புணருத்தானம் மகமட் காலத்தில் 1817 இல் மேற் கொள்ளப்பட்டது. பாறைக் குவிமாடத்துடன் இணைந்தாற்போல் தனியான தீர்க்கதரிசி குவிமாடம் 1620 இல் உதுமானால் கட்டப்பட்டது.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து இன்று வரை

11. சூன் 1927 அன்று பாலஸ்தீனத்தை தாக்கிய பூமியதிர்ச்சியில் பாறைக் குவிமாடம் பலத்த சேதத்திற்குள்ளாகி, அதற்கு முன்னைய ஆண்டுகளில் செய்த திருத்தங்கள் பயனற்றுப் போயின.

1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போர் வெற்றியின்போது இசுரேல் பாறைக் குவிமாடத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இசுரேலிய பாதுகாப்பு படைகளின் யூத போதகரான ஸ்லோமோ கெரென் தோராவுடனும் சோபாருடனும் பாறைக் குவிமாடத்தினுள் சென்றார்.[7]

ஆறு நாள் போரின்போது பாறைக் குவிமாடத்தில் ஏற்றப்பட்ட இசுரேலிய தேசியக் கொடி சில மணித்தியாலங்களில் மோசே டயானின் உத்தரவின்படி இறக்கப்பட்டது. சமாதனத்தை பேணும் விதமாக அப் பகுதியின் அதிகாரம் முசுலிம்களுக்கு கொடுக்கப்பட்டது.[8]

சில யூத குழுக்கள் பாறைக் குவிமாடத்தை மக்காவிற்கு நகர்த்திவிட்டு மூன்றாவது யூத தேவாலயத்தை கட்ட விரும்புகின்றன. பாறைக் குவிமாடத்தை புனிதமாக முசுலிம்கள் கருதுவதனால் இச் செயல் பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும் எனலாம். யூத குழுக்களின் விருப்பு பற்றி இசுரேலியர்கள் இருவித கருத்துக்களைக் கொண்டு இருக்கின்றார்கள். சில சமய பற்றுள்ள யூதர்கள், யூத ஆலயம் மெசியாவின் காலத்தின் கட்டப்பட வேண்டும் என்கின்றனர் சில சுவிசேச கிருஸ்தவர்கள் கருத்துப்படி, யூத ஆலயம் கட்டும் செயல் கடைசி காலத்திற்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் முன் நிகழ வேண்டிய நிகழ்வு என்கின்றனர்.

பாறைக் குவிமாடத்தின் படம் ஈரானிய 1000 ரியாலின் பின் பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.[9]

Remove ads

கட்டிடக்கலையின் தாக்கம்

பாறைக் குவிமாடத்தை பிரதி செய்து பல கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. சில எண்கோண தேவாலயங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம் கிருஸ்தவர்களின் யெரூசலேம் தேவலயம் பற்றிய நம்பிக்கையே இப் பிரதிபலிப்பிற்கு முக்கிய காரணம். ஓவியர் ரபாயலின் ஓவியங்களில் இது பிரதிபலிப்பதையும் காணலாம்.[10]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

மேலதிக வாசிப்பு

வெளிச் சுட்டிகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads