பாலக்காட்டு மாதவன்

2015 இந்தியத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாலக்காட்டு மாதவன் (Palakkattu Madhavan) 2015ம் வருடம் தமிழ் மொழியில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். இத் திரைப்படம் குருவன்ன பஷீர் தயாரிப்பில், எம். சந்திரமோகன் திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்தது. இத் திரைப்படத்தில் விவேக் மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடங்களிலும், ஷீலா கெளரவ வேடத்திலும் நடித்துள்ளனர்.[1][2][3]

விரைவான உண்மைகள் பாலக்காட்டு மாதவன், இயக்கம் ...
Remove ads

கதை சுருக்கம்

பாலக்காட்டு மாதவன் விவேக் ,சோம்பேறித்தனமான, பொறுப்பற்ற மனிதனாக உள்ளான். அவன் மனைவி லட்சுமி (சோனியா அகர்வால்), மாதவனை விட அதிகம் வருவாய் ஈட்டுபவராக உள்ளார். மாதவன் தான் பார்க்கும் வேலையை விட்டுவிடுகிறான். இதனால் வீட்டில் இருவருக்கும் சண்டை வருகிறது. பிறகு, மாதவன் வயதான பெண்மணி, பட்டு மாமியை ஷீலா வாடகைத் தாயாக வீட்டிற்கு அழைத்து வருகிறான். பட்டுமாமி மாதவனுக்கு பண உதவி செய்கிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை நகைச்சுவையுடன் இத் திரைப்படம் சித்தரிக்கிறது.

பாலக்காட்டு மாதவன் கதாபாத்திரத்தின் பெயர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த "அந்த ஏழு நாட்கள்" திரைப்பட கதாபாத்திரத்தின் பெயரோடு ஒத்துப்போகிறது. 'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தில் கே. பாக்யராஜ் (நடிகர்) மற்றும் அம்பிகா (நடிகை) நடித்துள்ளனர். இது அக் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

Remove ads

நடிப்பு

தயாரிப்பு

2014ம் ஆண்டு, சூன் மாதம் எம்.சந்திரமோகன் இயக்குநராகவும், சாஜீவ் தயாரிப்பிலும், விவேக் கதாநாயகனாக நடிக்க,இத் திரைப்படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.[4]

வரவேற்பு

"ஸிஃபி" சிஃபி பத்திரிகை, இத் திரைப்படத்திற்கு ஐந்துக்கு நான்கு புள்ளிகள் கொடுத்தது. மேலும் விவேக் வரும் காட்சிகளில் ரசிகர்கள் ஈடுபாட்டுடன் படத்தை ரசித்தனர் எனப் பாராட்டியது.[5]"டைம்ஸ் ஆஃப் இந்தியா" தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு பொதுவாக பாராட்டினாலும், திரைக்கதையில் தொய்வு உள்ளதை சுட்டிக்காட்டியது.[6]

இத் திரைப்படம் வெளியான முதல் நாள் வசூல் சென்னையில் ரூபாய் 8 லட்சம். இந்த வசூல் ஏமாற்றத்தை தந்தது. பாக்ஸ் ஆபிஸில் இத் திரைப்படம் ரூபாய் 1.2. கோடி வசூல் செய்தது.

Remove ads

இசை அமைப்பு

இத் திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசை அமைத்துள்ளார்.[7] நடிகர் விவேக் எழுதிய "உச்சிமேல" எனத் தொடங்கும் பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார்.[8]

  1. உச்சிமேல — அனிருத் ரவிச்சந்தர்
  2. சந்தோசமே — ஸ்ரீராம் பார்த்தசாரதி
  3. எப்படி இருந்தேன் கங்கை அமரன்
  4. கண்ணன் போல் — சர்முகி ராமன்

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads