பாலாமணியம்மா (கவிஞர்)

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

பாலாமணியம்மா (கவிஞர்)
Remove ads

பாலாமணியம்மா (Balamani Amma, 19 ஜூலை 1909 - 29 செப்டம்பர் 2004) மலையாளத்தில் எழுதிய ஒரு இந்தியக் கவிஞர் ஆவார். அம்ம, முத்தச்சி மற்றும் மழவின்டே கதா (கோடாரியின் கதை) ஆகியவை இவரது நன்கு அறியப்பட்ட படைப்புகளில் சில.[1] பத்ம பூசண்,[2] சரஸ்வதி சம்மான், சாகித்திய அகாதமி விருது மற்றும் எழுத்தச்சன் விருது உட்பட பல விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றவர்.[3] இவர் எழுத்தாளர் கமலா தாஸின் தாயார்.[4]

விரைவான உண்மைகள் நலபாடு பாலாமணியம்மா, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக்குறிப்பு

இவர் சிற்றஞ்ஞூர் அரண்மனையில் வாழ்ந்த குஞ்ஞுண்ணிராஜாவுக்கும், நலபாடு கொச்சுக்குட்டியம்மைக்கும் மகளாகப் பிறந்தார். இவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நலபாடு என்ற ஊரில் பிறந்தார். இவரது தாய்மாமனான நலபாடு நாராயண மேனன், ஒரு மலையாளக் கவிஞராவார். இவர் பாலாமணியம்மாவுக்கு பாடம் கற்பித்தார். மேலும், வள்ளத்தோள் நாராயண மேனன் அவர்களது எழுத்தார் ஈர்க்கப்பட்டார்.[5]

19 வயதில், வி. எம். நாயரை மணந்தார். நாயர் மலையாள செய்தித்தாளான மாத்ரு பூமியின் நிர்வாக இயக்குநராகவும் நிர்வாக ஆசிரியராகவும் இருந்தார்.[6] திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் வாழ கொல்கத்தா சென்றார்.[7] வி. எம். நாயர் 1977 இல் இறந்தார்.[7]

Remove ads

இறப்பு

ஐந்து வருடங்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலாமணி அம்மா, செப்டம்பர் 29, 2004 அன்று இறந்தார். இவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

ஆக்கங்கள்

கவிதைகள்

இவர் எழுதிய மலையாளக் கவிதைகளின் பெயர்களை கீழே காணலாம்.

  • கூப்புகை (1930)
  • அம்ம (1934)
  • குடும்பினி (1936)
  • தர்மமார்க்கத்தில் (1938)
  • ஸ்த்ரீ ஹ்ருதயம் (1939)
  • பிரபாங்குரம் (1942)
  • பாவனயில் (1942)
  • ஊஞ்ஞாலின் மேல் (1946)
  • களிக்கொட்ட (1949)
  • வெளிச்சத்தில் (1951)
  • அவர் பாடுன்னு (1952)
  • பிரணாமம் (1954)
  • லோகாந்தரங்ஙளில் (1955)
  • சோபானம் (1958)
  • முத்தச்சி (1962)
  • மழுவின்றெ கத (1966)
  • அம்பலத்தில் (1967)
  • நகரத்தில் (1968)
  • வெயிலாறும்போழ் (1971)
  • அம்ருதங்கமய (1978)
  • சந்திய (1982)
  • நிவேத்யம் (1987)
  • மாத்ரு ஹ்ருதயம் (1988)
  • சகபாடிகள்
  • பாலாமணியம்மையின் கவிதைகள்

விருதுகள்

  • கேரள இலக்கிய மன்றத்தின் விருது, (1964) - (முத்தச்சி என்ற தொகுப்புக்கு)
  • இந்திய இலக்கிய மன்றத்தின் விருது, (1965) - (முத்தச்சி என்ற தொகுப்புக்கு)
  • பத்ம பூசண் (1987) [8]
  • ஆசான் விருது (1991)
  • வள்ளத்தோள் விருது (1993)

மேற்கோள்கள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads