பிசாசு (2014 திரைப்படம்)
மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிசாசு என்பது மிஷ்கின் இயக்கம் மற்றும் எழுத்தில் இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் வெளிவந்த ஓர் இந்திய தமிழ் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் புதுமுகங்களான கதையின் நாயகர் நாகா, நாயகி பிரயாகா மார்டின் மற்றும் இவர்களுடன் ராதாரவி, இராஜ்குமார், அஸ்வத் ஆகியோரும் நடித்துள்ளனர். திரைப்படம் சய ஆண்டு மார்கழி மாதம் ௪ம் நாள் (19 திசம்பர் 2014) வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.[1]
Remove ads
நடிப்பு
- நாகா (சித்தார்த்தாக)(அறிமுகம்)
- பிரயகா மார்ட்டின் (பவாணி)
- ராதாரவி (பவாணியின் தந்தை)
- இராஜ்குமார் (யோகி)
- அஸ்வத் (பத்ரி)
- கல்யாணி நடராசன் (சித்தார்த்தின் தாய்)
- ஹரிஷ் உத்தமன் (கோபக்கார கணவர்)
- கனி குசுருதி (கோபக்கார கணவரின் மனைவி)
- வினோதினி வைத்தியநாதன் மகேசின் தாய்
வரவேற்பு
இந்து தமிழ் திசை நாளிதழ் "பாடல்களையும் காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டு, அசல் சினிமா அனுபவத்தைத் தர முனையும் அவரது முயற்சி பாராட்டப்பட வேண்டியது. தனது க்ளீஷேக்களின் மீது இருக்கும் பற்று குறைந்தால் மிஷ்கினால் மேலும் நேர்த்தியான அனுபவத்தைத் தர முடியும்" என்று விமர்சனம் எழுதினர்.[2] பிலிமி பீட் வலைத்தளம் இத்திரைப்படத்திற்கு "எடுத்தது பேய்ப் படம் என்றாலும், தன்னால் முடிந்த ஒரு பகுத்தறிவுப் பிரச்சாரத்தை வைத்திருக்கிறார்" என்று விமர்சனம் எழுதி மதிப்பீடு கொடுத்தனர்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads