பிசுக்கோவ் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிசுக்கோவ் மாகாணம் (Pskov Oblast, உருசியம்: Пско́вская о́бласть, பிசுக்கோவ் ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். மக்கள்தொகையாக 1,386,186[9] பேரைக்கொண்ட இதன் அலுவல்முறை ஆட்சி மையம் பிசுக்கோவ் நகரம் ஆகும்.
Remove ads
புவியியல்
பிசுக்கோவ் மாகாணத்திற்கு உருசிய கூட்டாட்சிக்குள் வடக்கில் லெனின்கிராடு ஓப்லசுது, கிழக்கில் நொவ்கோரோட் ஒப்லாஸ்து, தென்கிழக்கில் துவேர் ஓப்லஸ்து மற்றும் சுமலியேன்ஸ்க் ஓப்லஸ்துக்களும், தெற்கில் பெலாரஸ் நாட்டின் விதெப்ஸ்க் ஓப்லஸ்து, மேற்கில் லாட்வியா, மேற்கு மற்றும் வடமேற்கில் எஸ்டோனியா ஆகியவையும் எல்லைகளாக உள்ளன.
மக்கள் வகைப்பாடு
பிராந்தித்தின் மக்கள் தொகை:
- 673,423 (2010 கணக்கெடுப்பு)
- 760,810 (2002 கணக்கெடுப்பு)
- 846,449 (1989 கணக்கெடுப்பு)
2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
- பிறப்பு: 7 323 (1000 பேருக்கு 11.0)
- இறப்பு: 12 949 (1000 பேருக்கு 19.5) [13]
மொத்தக் கருத்தரிப்பு விகிதம்:[14]
- 2009 - 1.52
- 2010 - 1.51
- 2011 - 1.54
- 2012 - 1.66
- 2013 - 1.68
- 2014 - 1.70 (கணிப்பு)
இனக்குழுக்கள்
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி பிராந்தியத்தில் கீழ்கண்டவாறு இனக்கலவை இருந்தது:[9]
- 95% உருசியர்
- 1.3% உக்ரைனியர்
- 1% பெலாரஷ்யர்கள்
- 0.5% ரோமா மக்கள்
- 0.4% ஆர்மேனியர்
- 0.1% எஸ்டோனியர்
- 1.7% மற்றவர்கள்
- 24.630 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[15]
Remove ads
சமயம்
2012 ஆண்டின் அலுவல்முறைக் கணக்கெடுப்புப்படி,[16] இந்த ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 49.6% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 5% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்தவர்கள், 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மத நம்பிக்கையாளர்கள், 1% பழைய நம்பிக்கையாளர்கள், 17% மதநாட்டம் அற்ற ஆன்மீகர்கள். 19% நாத்திகர்கள், 6.4% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[16]
பொருளாதாரம்
தொழில்
2009 ஆண்டில் மின்னணுத்தொழில் மற்றும் உணவுத்துறைத் தொழில் நிறுவனங்கள் சேர்ந்து ஓப்லஸ்துத் தொழில்துறை உற்பத்தியில் 50% நிறைவுசெய்துள்ளன.[17] பிராந்தியத்தில் பிஸ்கோவ் மற்றும் வெலிக்கிய லுகி ஆகிய இரு நகரங்களில் தொழில்துறை நிறுவனங்கள் செறிவுடன் உள்ளன.
வேளாண்மை
இந்த ஓப்லஸ்தின் வேளாண்சார்ந்த முதன்மைத்தொழில்கள் பால்பண்னை, இறைச்சி உற்பத்தி போன்ற கால்நடை மந்தைத்தொழில்களாகும்.[18]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads