பிரண்டன் மெக்கல்லம்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் From Wikipedia, the free encyclopedia

பிரண்டன் மெக்கல்லம்
Remove ads

பிரெண்டன் பேரி மெக்கல்லம் (Brendon Barrie McCullum (பிறப்பு: செப்டம்பர் 27, 1981) துடுப்பாட்டப் பயிற்சியாளர், முன்னாள் நியூசிலாந்துத் துடுப்பாட்ட வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆவார். இவர் அனைத்து விதமான துடுப்பாட்ட வடிவங்களிலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.[1] மெக்கல்லம் விரைவாக ஓட்டங்களை எடுப்பதன்மூலம் பரவலாக புகழ்பெற்றார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக நூறு ஓட்டங்களை எடுத்து சாதனை செய்தார். ஆகஸ்ட் 2019 இல் அனைத்து வகையான துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.[2] தற்போது இங்கிலாந்து தேர்வு அணியின் தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லம் பணியாற்றி வருகிறார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

மெக்கல்லம் பன்னாட்டு இருபது20 வடிவத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் ஆவார், ப இ20இல் இருமுறை நூறு ஓட்டங்கள் எடுத்த இரு நியூசிலாந்து வீரர்களில் ஒருவர் ஆவார். மார்ட்டின் கப்திலும் இரு முறை நூறு ஓட்டங்களை எடுத்துள்ளார்.[3][4][5][6] பிப்ரவரி 2014இல் இந்தியாவுக்கு எதிராக 302 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் தேர்வுப் போட்டிகளில் மூன்று நூறு அடித்த முதல் நியூசிலாந்து வீரர் ஆனார். 2014 ஆம் ஆண்டில், ஒரு நாட்காட்டி ஆண்டில் (1164) 1000 தேர்வுத் துடுப்பாட்ட ஓட்டங்களை எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 2015ல் கேன் வில்லியம்சன் 1172 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். 20 பிப்ரவரி 2016 அன்று தனது கடைசி தேர்வுப் போட்டியில் மெக்கல்லம் 54 பந்துகளில் அதிவேக நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார், 56 பந்துகளில் தனது முன்மாதிரியான விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை முறியடித்தார், மொத்தம் 79 பந்துகளில் 145 ஓட்டங்கள் எடுத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அதிவேகமாக 150 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.[7][8]

இருபது20 போட்டியில் இரண்டு நூறுகள் அடித்த முதல் வீரர் இவர் ஆவார். பன்னாட்டு இருபது20இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 123 ஓட்டங்களையும் 2008 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 158 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் இந்தச் சாதனையானது 2013 ஐபிஎல் பதிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆரோன் ஃபின்ச் (ஆஸ்திரேலியாவுக்காக ஜிம்பாப்வேக்கு எதிராக 172) மற்றும் கிறிஸ் கெய்ல் ( புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக 175) இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது.[9][10] சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2014 மற்றும் 2015 பருவங்களில் விளையாடினார்.

Remove ads

உள்ளூர்ப் போட்டிகள்

மார்ச் 3, 2008இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியினை எதிர்கொள்வதற்கு முன்னர் ஆக்லாந்து ஏசஸ் அணிக்கு எதிராக இசுட்டேட் சீல்டு அணி சார்பாக விளையாடினார்.ஈடன் பூங்கா ஓவலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 170 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தப் போட்டியில் 52 பந்துகளில் 14 நான்கு மற்றும் 5 ஆறு ஓட்டங்கள் உட்பட நூறு ஓட்டங்களை எடுத்தார். இதில் பல உள்ளூர்ப் போட்டி சாதனைகளை முறியடித்தார். இதற்கு முன்னர் ஹார்லேண்ட் என்பவர் அடித்ததே அதிக ஓட்டச் சாதனையாக இருந்தது.

Remove ads

சர்வதேசப் போட்டிகள்

ஆரம்பகாலங்களில்

2004 இல், அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடினார் மற்றும் இலார்ட்சில் 96 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச ஓட்டமாக இருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு வங்காளதேசத்திற்கு எதிராக 143 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். ஜிம்பாப்வேக்கு எதிராக 111 ஓட்டங்கள் எடுத்தது இரண்டாவது நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.

ஜூலை 2005 இல் ஐசிசி சூப்பர் சீரிஸிற்கான 20 பேர் கொண்ட ஐசிசி உலக லெவன் அணியில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 20,2007 இல், ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் எடுத்தார், நியூசிலாந்து 1997 க்குப் பிறகு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முழுவதுமாக தொடரை வெற்றி பெற்ற முதல் அணியாக இருந்தது. கிரேக் மக்மில்லனுடன் இணைந்து 165 ஓட்டங்கள் எடுத்தார், 6வது இணைக்கு அதிக ஓட்டங்கள் எடுத்த இணை எனும் சாதனையினை சமன் செய்தார்.[11]

டிசம்பர் 31, 2007 அன்று, வங்காளதேசத்திற்கு எதிராக 19 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். 28 பந்துகளில் 9 நான்குகள் மற்றும் 6 ஆறுகள் உட்பட 80 ஓட்டங்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 285.71 ஆகும்.

Remove ads

சர்வதேச அங்கீகாரம்

2015 ஆம் ஆண்டு குயின்ஸ் பர்த்டே ஹானர்ஸில், துடுப்பாட்ட சேவைகளுக்காக நியூசிலாந்து ஆர்டர் ஆஃப் மெரிட்டின் அதிகாரியாக மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.[12] அவர் 2014 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் சிறந்த விளையாட்டு வீரர் விருதையும், பின்னர் [13] இல் நியூசிலாந்தின் தலைமைத்துவ விருதையும் வென்றார்.

பயிற்சியாளராக

ஆகஸ்ட் 2019 இல் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் [14] அவரது தலைமையின் கீழ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 2020 இல் 4வது CPL பட்டத்தை வென்றது.

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads