பிரதமை
திதிகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரதமை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். பிரதம எனும் வடமொழிச் சொல் முதலாவது எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் முதல் நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள காலம் சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் முதல் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள காலம் கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் முதல் நாளுமாக இரண்டு முறை பிரதமைத் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் பிரதமையைச் சுக்கில பட்சப் பிரதமை என்றும், பூரணையை அடுத்த பிரதமையைக் கிருட்ண பட்சப் பிரதமை என்றும் அழைக்கின்றனர்.

Remove ads
வானியல் விளக்கம்
சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] பிரதமைத் திதி முதலாவது திதியும் 16 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 0 பாகையில் இருந்து 12 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சப் பிரதமைத் திதியும், 180 பாகையிலிருந்து 192 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சப் பிரதமையும் ஆகும்.
Remove ads
இந்து சமயச் சிறப்பு நாட்கள்
இந்து சமயத்தினர்க்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாகக் கொண்டே வருகின்றன. பிரதமைத் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:
Remove ads
காண்க
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads