பிரம்மானந்த சுவாமி சிவயோகி
நாத்திகர், எழுத்தாளர், கேரள சமூக சீர்திருத்தவாதி, சமசுகிருத ஆசிரியர் (1852-1929) From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரத் கோவிந்த மேனன் (Karatt Govinda Menon) (26 ஆகஸ்ட் 1852 – 10 செப்டம்பர் 1929), பிரம்மானந்த சுவாமி சிவயோகி என்றும் நன்கு அறியப்பட்ட இவர், இன்றைய கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்தியத் துறவி ஆவார். இவர் 1918 இல் ஆனந்த மகா சபையை நிறுவினார். இவர் ஆனந்ததர்சம் அல்லது ஆனந்தமதம் (பேரின்ப மதம்) என்பதை முன்மொழிந்தார்.[1]
கேரளாவில் உள்ள பிரம்ம சமாஜத்தின் சமூக சீர்திருத்தவாதியும், பிரச்சாரகரும், சுகனவர்த்தினி இயக்கத்தின் நிறுவனருமான அய்யத்தான் கோபாலன், இவரது ஆன்மீக மற்றும் இலக்கிய அறிவை அங்கீகரித்து இவருக்கு "பிரம்மானந்த சுவாமிகள்" என்று பெயரிட்டார்.[2] வாக்பதானானந்தா,[3][4] அய்யத்தன் கோபாலனின் வேண்டுகோளின் பேரில் பிரம்மசங்கீர்த்தனம் (பிரம்ம பிரார்த்தனைக் கூட்டங்களின் போது பாடப்படும் பிரார்த்தனைப் பாடல்) என்ற கவிதையை எழுதியதற்காகவும், பிரம்ம சமாஜத்தின் கொள்கைகளை விரிவுபடுத்தியதற்காகவும் கௌரவிக்கப்பட்டார். 1891 ஆம் ஆண்டு ஆலத்தூரில் ‘சித்தாசிரமம்’ என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார். ஆனந்தம் (மகிழ்ச்சி அல்லது பேரின்பம்) எந்தவொரு மனித நடவடிக்கையின் தொடுகல்லாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை இவர் முன்வைத்தார். இவர் தலைமை தாங்கிய இயக்கம் கேரள சீர்திருத்த இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தது.
Remove ads
சுயசரிதை
பிரம்மானந்த சிவயோகி 1852 ஆகஸ்ட் 26 அன்று கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இவர் "கரத்" குடும்பத்தைச் சேர்ந்த நானி அம்மா மற்றும் வல்லங்கியில் உள்ள குன்னத் ரவுன்னியாரத்தின் குஞ்ஞிகிருஷ்ண மேனன் ஆகியோரின் ஒன்பதாவது மகனாவார். இவருக்கு ஒன்பது சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். தனது குழந்தை பருவத்தில் கோவிந்தன்குட்டி என்று அழைக்கப்பட்டார். இவரது தாயார் மதத்தின் கொள்கைகளை கண்டிப்பாக பின்பற்றிய ஒரு பக்தியுள்ள நாயர் பெண்மணி ஆவார். இவரது பெற்றோரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இயற்கையாகவே பழமைவாதத்தை நோக்கி இவரைத் தூண்டினர். கோவிந்தன்குட்டி ஒரு நாயர் சிறுவனின் அனைத்து பாரம்பரிய வாழ்க்கையையும் ஏற்றுக்கொண்டார். அவர் கோயில்களுக்குச் சென்று, தனிப்பட்ட கடவுள்களை வழிபட்டார். பிரார்த்தனைச் சடங்குகள் உட்ப்ட பிற மத பழக்கவழக்கங்களில் ஈடுபட்டார். கொல்லங்கோடு வாரியம் தொடக்கப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் கேரளாவில் கல்வித் துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் தெரியாது. சமசுகிருத அறிஞர்கள் எல்லா இடங்களிலும் மதிக்கப்பட்டனர். மாணவர்கள் வழக்கமாக சமசுகிருத அறிஞர்களின் இல்லத்திற்கு சென்று மொழியை கற்று கொள்வார்கள். பத்மநாப சாஸ்திரி என்பவர் கோவிந்தன்குட்டிக்கு வழிகாட்டியாக இருந்தார். இவரது தந்தை தனது மகனை சமசுகிருதத்தில் உயர் கல்வி பயில கூடலூர் அனுப்பினார். இவர் தனது குருவிடமிருந்து இலக்கணம், கவிதை மற்றும் கவிதைகளைப் படித்தார். இந்தக் காலகட்டத்தில் இவர் தனது கவிதை மேதமையை வெளிப்படுத்தினார். மேலும், இந்து வேதங்கள் மற்றும் தமிழ் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றார். இவரது ஆரம்பகால வாழ்க்கையிலோ அல்லது குழந்தைப் பருவத்திலோஇவரது பகுத்தறிவு அல்லது நாத்திகவாதம் பற்றிய பிற்கால நம்பிக்கைகளின் கண்கவர் அல்லது எந்த அறிகுறியும் இல்லை.
Remove ads
ஆசிரியர் பணி
தனது சமசுகிருதப் படிப்புக்குப் பிறகு, கரத் கோவிந்த மேனன் எர்ணாகுளத்திற்குச் சென்று அங்கு சமசுகிருதம் கற்பிக்கும் ஆசிரியராக சேர்ந்தார். எர்ணாகுளத்தில் சிறுது காலம் தங்கியிருந்ததும், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட பலருடன் பழகியதும் இவரது கண்ணோட்டத்தை விரிவுபடுத்தியது. கேரளாவில் பிரம்ம சமாஜத்தின் தலைவரும் பிரச்சாரகருமான அய்யத்தான் கோபாலனின் கொள்கைகளால் இவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். கடவுள், மதம் மற்றும் பாரம்பரியம் குறித்த இவரது அணுகுமுறை மெதுவாக மாற்றத்திற்கு உட்பட்டது.
மேலும் கோழிக்கோடு பூர்வீக உயர்நிலைப் பள்ளியில் சமசுகிருத ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் கோழிக்கோட்டில் பிரம்ம சமாஜத்தின் ஒரு கிளை செயல்பட்டு வந்தது. பிரம்ம சமாஜத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விவாதங்களில் கோவிந்த மேனன் பங்கேற்றார். இவர் பிரம்ம சமாஜத்திற்கு அடிக்கடி வருகை தந்தார். அய்யத்தன் கோபாலன் மற்றும் மலபார் பிரம்ம சமாஜிகளின் வேண்டுகோளின் பேரில் பிரம்மசங்கீர்த்தனம் என்ற புத்தகத்தை எழுதினார். கோழிக்கோட்டில் தங்கியிருந்தபோது ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார். சாதி என்பது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு அமைப்பு என்பதை இவர் உணர்ந்தார். பாரம்பரிய இந்து சமூகத்தின் சடங்குகளிலிருந்து இவர் மெதுவாக வெளிப்பட்டார். தத்துவ ரீதியாக இந்து சமயத்திலிருந்து விலகினார். பின்னர் கோழிக்கோடு பள்ளியிலிருந்து வெளியேறி ஆலத்தூரில் ஒரு நடுநிலைப் பள்ளியில் சேர்ந்தார். அதற்குள் இவர் "பிரம்மானந்த சுவாமிகள்" என்ற பெயரில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டார்.
Remove ads
சமூக சீர்திருத்த நடவடிக்கைகள்
படிப்படியாக இவர் இராஜயோக பயிற்சியினை செய்யத் தொடங்கினார். இந்த நேரத்தில், இவர் துறவு வாழ்க்கையைத் தழுவி, ஆலத்தூரில் உள்ள தனது இல்லத்திற்கு சித்தாசிரமம் என்று பெயரிட்டார். சிவயோகி 1907 ஆம் ஆண்டில் தனது கற்பித்தல் தொழிலை நிறுத்திவிட்டு, தனது ஆன்மீக பணியுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டார். 1907 ஆம் ஆண்டில் ஆலத்தூரில் சித்தாசிரம் என்ற ஆன்மீக நிறுவனத்தை நிறுவினார். ஆலத்தூரில் குடியேறிய பிறகு பிரம்மானந்த சிவயோகியின் புரட்சிகர நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனந்தமதம் (பேரின்பத்தின் மதம்) என்ற இயக்கத்தைத் தொடங்கிய இவர், ஆனந்தமதத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக கேரளாவின் சில பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவரது மனைவி தவுக்குட்டியம்மா இவரது முதன்மையான சீடராக ஆனார். மேலும் அவருக்கு யோகினிமாதா என்ற பட்டம் கிடைத்தது.
ஒரு சமூக சீர்திருத்தவாதியாக, பிரம்மானந்த சிவயோகி ஒருபோதும் மேடைகளில் தோன்றவில்லை. ஆனால் பெரும் மக்களிடையே உரையாற்றினார். மூடநம்பிக்கைகள் மற்றும் அறியாமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள மக்களுக்கு அறிவூட்டுவதும் அவர்களுக்குக் கற்பிப்பதும் இவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அவர் ஒரு சமசுகிருத அறிஞராக இருந்தபோதிலும், சமூகத்தில் அவர்களின் உண்மையான நிலையை சாமானிய மக்களுக்கு உணர்த்துவதற்காக, இவர் எளிய மலையாள மொழியை விரும்பினார். மூடநம்பிக்கைகளும் தீய பழக்கவழக்கங்களும் சாமானிய மக்களை பாதித்ததாக பிரம்மானந்த சிவயோகி நம்பினார். மனிதகுலத்தின் அசல் உலகளாவிய மதம் "ஆனந்தம்" மட்டுமே என்ற அறிவின் மூலம் மதப் பகைமையையும் துயரத்தையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் கருதினார். சிவயோகியின் நேரடி சீடர்களான வி, கே, கோம்பி அச்சன், சிவராமகிருஷ்ண ஐயர், ஜி. கிருஷ்ண ஐயர், சூரியநாராயண சர்மா, பி. ஏ. ஆனந்தன், வாக்பதாநந்தா, இராம வாரியர் ஆகியோர் இவரது கொள்கைகள் குறித்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
இறப்பு
வடவன்னூரில் உள்ள முக்கில் மருதூரைச் சேர்ந்த தவுக்குட்டி அம்மா என்பவரை மணந்தார். சுவாமி சிவயோகி 1929 செப்டம்பர் 10 அன்று தனது 77வது வயதில் காலமானார்.
இவரைப் பற்றிய புத்தகங்கள்
- Biography of Brahmananda Sivayogi written by K Bheeman Nair "Asathyathil ninnu sathyathilekku"(അസത്യത്തിൽ നിന്ന് സത്യത്തിലേക്ക് )
- Biography of Brahmananda swami Sivayogy by A K Nair
- Brahmananda Swami Sivayogi by Pavanan
- Brahmananda Swami Sivayogi and His Selected Works by P.V. Gopalakrishnan
- Brahmananda Swami Sivayogi - Pavanan (Department of Cultural Publications, Government of Kerala, Thiruvananthapuram -14, Kerala)
- Kerala Navothanam - Oru Marxist Veekshanam - P. Govindappilla (Chintha Publishers, Thiruvananthapuram-695001)
- Saragrahi Monthly - Various issues
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads