பிரிஞ்சாங் மலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரிஞ்சாங் மலை (மலாய் மொழி: Gunung Brinchang; ஆங்கிலம்: Mount Brinchang) என்பது மலேசியா, பகாங், பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ளது. கேமரன் மலையில் இரண்டாவது உயர்ந்த மலையாகும். இந்த மலையின் உச்சியை வாகனங்களின் மூலமாகவும் சென்று அடையலாம்.[1]
சாலை வழியாக மலை உச்சியை சென்று அடையக் கூடிய மலேசிய மலைகளில், பிரிஞ்சாங் மலையும் ஒன்றாகும். மலேசியாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலைகளில், இந்த பிரிஞ்சாங் மலைச் சாலை தான் முதலிடம் வகிக்கிறது. பிரிஞ்சாங்நகரில் இருந்து, மலை உச்சிக்குச் செல்ல 12 கி.மீ. சாலை போடப்பட்டு இருக்கிறது. நடந்து சென்றால் மூன்று மணி நேரத்தில் மலை உச்சியைச் சென்று அடையலாம்.
Remove ads
பாசிபடிந்த பாறைகள்
தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த மலையின் உச்சியில், வானொலி தொலைக்காட்சி கோபுரங்களும், 15 மீட்டர் உயரம் கொண்ட ஒரு கண்காணிப்பு கோபுரமும் உள்ளன. அங்கு இருந்து தித்திவாங்சா மலைத்தொடரை நன்கு பார்க்க முடியும். பிரிஞ்சாங் மலையின் உச்சியில் பாசிபடிந்த பாறைகளும் தாவரங்களும் நிறைய உள்ளன.[2]
முன்பு பிரிஞ்சாங் மலையில் பல அபூர்வமான மலைவாழ் சிறு விலங்குகள் இருந்தன. சில அரிய வகை தாவரங்களும் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் மிகவும் குறைந்து விட்டன.[3] மலை உச்சிக்குச் செல்லும் சுற்றுப் பயணிகள் அந்தத் தாவரங்களையும் சிறுவிலங்குகளையும் எளிதாகக் கடத்தி வந்தனர்.
அதனால், அந்த மலையின் தாவர அரியத் தன்மை பாதிக்கப் பட்டது. அதைத் தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் இப்போது கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர்.[4]
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads