பிரித்தானிய கெல்ட்டியர்

From Wikipedia, the free encyclopedia

பிரித்தானிய கெல்ட்டியர்
Remove ads

பிரித்தானிய கெல்ட்டியர்(Celts in Britain) என்பவர் கி.மு 750 ஆண்டு முதல் கி.மு 12 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பியா முழுதும் மிகவும் பலமிக்க ஒரு மக்கள் குழுமங்களாக வாழ்ந்தவர்களாவர். இந்த கெல்ட்டியல் இனக்குழுமத்தினர் இடையே பல்வேறு இனப்பிரிவுகள் அல்லது இனக்குழுமங்கள் இருந்தன. இனக் குழுமங்களிடையே பேச்சு வழக்கு வேறுபட்டிருந்தாலும், கிட்டத்தட்ட ஒத்த பேச்சு வழக்கு காணப்பட்டன.

விரைவான உண்மைகள் இங்கிலாந்தின் வரலாறு, இங்கிலாந்தின் அரச சின்னம் (1198-1340) ...
Remove ads

சொல்விளக்கம்

"கெல்டிக்" எனும் சொல் வழக்கு கிரேக்கர்களிடம் இருந்து தோன்றிய ஒரு சொல்லாகும். "கெல்டிக்" என்றால் ஆங்கிலத்தில் இன்றையப் பொருள் "பாபேரியன்" என்பதாகும். தமிழில் "காட்டுமிராண்டி" எனப்படும். இந்த கெல்டிக் இனக் குழுமத்தினர் அக்காலப்பகுதியில் பண்படாத, வெட்டு குத்து என்று மிகவும் கொடூரமானவர்களாகவே இருந்துள்ளனர். அதனாலேயே அந்த இனக்குழுமங்களை எல்லாம் கிரேக்கர்கள் "கெல்டிக்" என்று அழைத்தனர். அதன் பின்னர் ஐரோப்பியாவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த உரோமர்களும் அதே சொல் கொண்டே இந்த இனக்குழுமங்களை அழைத்தனர்.

இந்த கெல்ட்டியர் இனக்குழுங்களில் பல்வேறு கெல்ட்டியர் பிரிவுகள் இருந்தன.

  • கோல்ஸ் கெல்ட்டியர்
  • கியேல்ஸ் கெல்ட்டியர்
  • பிரிட்டன் கெல்ட்டியர்

போன்றவை அவற்றின் முக்கிய சில பிரிவுகளாகும். இதில் பிரிட்டன் கெல்ட்டியர் என்போரே பிரித்தானியாவில் குடியேறி இருந்த கெல்ட்டியர் ஆவர்.

Remove ads

உரோமர் படையெடுப்பு

கி.மு 55 யூலியஸ் சீசரின் தலைமையில் பிரித்தானியாவுக்கு ஒரு படையெடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரித்தானியாவின் சில பகுதிகளை கைப்பற்றிய யூலியஸ் சீசர் பின்னர் அவற்றை விட்டுவிட்டு வெளியேறினார்.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads