முந்தைய வரலாறு (பிரித்தானியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரித்தானியாவின் முந்தைய வரலாறு (Prehistoric Britain) என்பது பிரித்தானியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் வரலாற்றைக் குறிக்கும். பிரித்தானியாவின் முதல் மனிதன் இரண்டரை (2,500,000) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அக்கால ஆதிமனிதர்கள் கற்கலால் ஆன சாதாரண ஆயுதங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடியவர்களாகவும் நம்பப்படுகிறது. அதற்கான எழுத்தாவணங்கள் எதுவும் இல்லாதப் போதும், அதற்கான சான்றுகளாக கல்லறைகள், நினைவுச்சின்னங்கள், மனிதக் கைத்திறனால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் வட்டக்கற்கள் போன்றன இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளன.[1] அத்துடன் புதிய கற்கால மனிதர்களின் கல்லறைகள், பயன்படுத்திய கருவிகள் போன்றன பிரிட்டிசு தீவின் எல்லாவிடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன.
Remove ads
கற்காலம்

500,000 அண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியாவில் இருந்து மக்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறினர். கி.மு 6,500களில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இருந்த நிலத்தகடு, ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் பனியுருகி கடல் பரப்பு விரிவடைந்ததால், ஐரோப்பாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்பட்டது. அத்துடன் ஐரோப்பிய நிலத்தகட்டில் இருந்து பிரித்தானியா பிரிந்து ஒரு தனி தீவாகியது.
புதிய கற்காலம்
கி.மு 3000 ஆண்டளவில் புதிய கற்காலத்தின் ஆரம்பங்களின் போது ஐரோப்பிய பகுதிகளில் இருந்து விவசாயம் செய்யும் மக்கள் குழுமங்கள் பிரித்தானியாவிற்கு வந்து குடியமர்ந்தனர்.
வட்டப்பாறை மற்றும் வெண்கலக்காலம்
கி.மு 3000ம் ஆண்டளவில் முதலாவது வட்டக்கற்கள் எழுப்பப்பட்டுள்ளன. மிகப்பெரிய பாறைகளை கொண்டுவந்து வட்டவடிவிலான கட்டடங்களை உருவாக்கப்பட்டுள்ளன. இவை இன்றும் பிரித்தானியா செல்வோரின் முக்கிய பார்வை இடங்களாக உள்ளன. கி.மு 2100 ஆண்டளவில் வெண்கலக் காலம் ஆரம்பமானது. பிரித்தானியாவில் குடியேறிய மக்கள் வெண்கலத்திலான கருவிகள், ஆயுதங்கள் உருவாக்கத் தொடங்கினர். கி.மு 2000 ஆண்டளவில் வட்டக்கற்கள் (Stonehenge) எழுப்பும் காலம் நிறைவடைந்தது.
வணிகத்தொடர்புகள் மற்றும் கிராமங்களின் தோற்றம்
கி.மு 1650 ஆண்டளவில் பிரித்தானியா உள்ளூருக்குள்ளும், பிரித்தானியாவின் அன்மித்த ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் ஏற்பட்டன. கி.மு 1200 களில் பிரித்தானியாவில் சிறிய கிராமங்கள் தோற்றம் பெறத்தொடங்கின.
இரும்புக்காலம்
கி.மு 750 களில் இரும்புகாலத்தின் தோற்றத்துடன் வெண்கலத்திற்கு பதிலாக மக்கள் இரும்பில் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உருவாக்கத் தலைப்பட்டனர். இரும்பு காலம் பிரித்தானிய மக்கள் மத்தியில் ஒரு பாரிய மாற்றத்தை அதேவேளை முன்னேற்றத்தினை ஏற்படுத்தின. இக்காலத்தில் பிரித்தானியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 150,000 இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
Remove ads
கெல்ட்டியரின் வருகை
ஐரோப்பிய பகுதிகளில் இருந்து பல கெல்ட்டியர் மக்கள் குழுமங்களாக வந்து பிரித்தானியாவில் குடியேறத்த்தொடங்கினர். அவர்கள் விவசாயிகளாகவும், கால்நடைகள் வளர்ப்பவர்களாகவும் இருந்தனர். பிரித்தானியாவுக்குள் வந்த இப்புதிய கெல்ட்டியர் மக்கள் சிறு கிராமங்களை அமைத்து வசிக்கலானர். இருப்பினும் இவர்கள் மிகவும் போர் விரும்பிகளாக இருந்தனர். ஏற்கெனவே பிரித்தானியாவுக்குள் இருந்த கெல்ட்டியர் இனக் குழுமங்களுடன் அடிக்கடி போர் புரிந்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads