பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகம்

From Wikipedia, the free encyclopedia

பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகம்
Remove ads

பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகம் (ஆங்கிலம்: British Military Administration of Borneo (BMA); மலாய்: Pentadbiran Tentera British (Borneo)) என்பது 1945 செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி 1946 சூலை 1-ஆம் தேதி வரையில், சரவாக் மற்றும் வடக்கு போர்னியோ பகுதிகளை பிரித்தானிய இராணுவத்தினர் நிருவாகம் செய்ததைக் குறிப்பிடுவதாகும்.

விரைவான உண்மைகள் பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகம்British Military Administration of Borneo, நிலை ...

இரண்டாம் உலகப் போர் முடிவு அடைந்த போது சப்பான் சரண் அடைந்தது. அந்த நிலையில் சரவாக், சபா, லபுவான் பகுதிகளில் நிர்வாக வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்புவதற்காக ஒரு பாதுகாப்பு நிருவாகம் (Caretaker Government) உருவாக்கப்பட்டது.

அந்த நிருவாகம் தான் பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிர்வாகம் எனும் தற்காலிக நிருவாகம் ஆகும்.[1]

Remove ads

பொது

1946-இல் சரவாக் மற்றும் வடக்கு போர்னியோவில் பிரித்தானிய முடியாட்சி நிறுவுவதற்கு இடையில் இந்த நிருவாகம் செயல்பட்டது.[2]

லபுவான் தீவில் போர்னியோவின் பிரித்தானிய இராணுவ நிர்வாகத்தின் தலைமையகம் இருந்தது. அந்தத் தலைமையகம் பெரும்பாலும் ஆத்திரேலிய அரசாங்கத்தின் இராணுவப் படையினரால் (Australian Imperial Force) நிருவகிக்கப்பட்டது.[4]

அந்த நிருவாகத்தின் கீழ் இன்றைய லபுவான், சபா, சரவாக் புரூணை பகுதிகள் இருந்தன. அவற்றுள் சரவாக் மாநிலம் மட்டும் பிரித்தானிய போர்னியோ பொது விவகாரப் பிரிவின் (British Borneo Civil Affairs Unit) கீழ் ஆத்திரேலியர்களால் நிருவகிக்கப்பட்டது.

Remove ads

மேலும் காண்க

சான்றுகள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads