பிரையான்சுக் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

பிரையான்சுக் மாகாணம்
Remove ads

பிரையான்சுக் மாகாணம் (Bryansk Oblast, உருசியம்: Бря́нская о́бласть, பிரையான்ஸ்கயா ஓபிலாஸ்த்)) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இதன் தலைநகர் பிரையான்சுக். 2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 1,278,217 ஆகும்.[7]

விரைவான உண்மைகள் பிரையான்சுக் மாகாணம்Bryansk Oblast, நாடு ...
Remove ads

புவியியல்

பிரையான்சுக் மாகாணம் ஐரோப்பிய உருசியாவின் மேற்கே கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் நடுப்பகுதி முதல் மேற்குப் பகுதி வரை, தெசுனா ஆறு, வோல்கா ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே சொமோலியன்சுக் மாகாணம், வடகிழக்கே காலுகா மாகாணம், கிழக்கே ஓரியோல் மாகாணம், தென்கிழக்கே கூர்சுக் மாகாணம், தெற்கே உக்ரைனின் செர்னீகிப், சூமி மாகாணங்கள், மேற்கே பெலருசின் கோமெல், மொகிலெவ் மாகாணம் ஆகியன உள்ளன.

Remove ads

மக்கள்

இங்குள்ள மக்கள்தொகை 1,278,217 (2010) ஆகும்.[7] 1,378,941(2002 கணக்கெடுப்பு);[11] 1,474,785(1989 கணக்கெடுப்பு).[12] இவர்களில் உருசியர்கள் 96.7%, உக்ரைனியர் - 1.1%, பெலருசியர் - 0.4%, ஆர்மீனியர் - 0.4%, ரோமா மக்கள் - 0.3%, யூதர் - 0.1% ஆவர்.[13]

சமயம்

2012 அதிகாரபூர்வ ஆய்வுகளின் படி,[14][15] 49.5% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 5% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாதக் கிறித்தவர்கள்.[14]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads