பிறந்தநாள்

From Wikipedia, the free encyclopedia

பிறந்தநாள்
Remove ads

பிறந்தநாள் ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டுவிழா ஆகும். பல பண்பாடுகளிலும் பிறந்தநாட்கள் பரிசு, விருந்து அல்லது சமயச்சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றன. பல சமயத்தினரும் தங்களது சமய நிறுவனர் அல்லது கடவுள்களின் பிறந்த நாட்களை கொண்டாடுகின்றனர். உலகெங்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏனையவரும் கொண்டாடும் ஓர் முதன்மையான பிறந்தநாள் விழாவாக கிறிஸ்துமஸ் உள்ளது. இருப்பினும் கிறித்தவர்களில் ஒருபிரிவினராகிய ஜெஹோவாவின் சாட்சிகள் கிறித்துவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை எதிர்க்கின்றனர் .[1]

Thumb
மெழுகுவத்திகள் வழமையாக ஆங்கில பிறந்தநாள் வாழ்த்துகளில் இடம்பெறுகின்றன
Remove ads

இந்தியா

இந்து சமயத்தில் ஒருவரின் பிறந்த நாள் அவர் சார்ந்த பிரிவினர் பின்பற்றும் சந்திர நாட்காட்டி அல்லது சூரிய நாட்காட்டியைப் பொறுத்து அதே மாதத்தில் வரும் திதி அல்லது நட்சத்திரம் (ஜென்ம நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது. அன்றையநாளில் சிறப்பு பூசை நடத்தப்படுகிறது. ஒருவரின் முதல் பிறந்தநாள் உறவினர்களுடன் சிறப்பான சடங்காக விளங்குகிறது. நீண்ட ஆயுளுக்காக சிறப்பு வேள்வி நடத்துவதும் உண்டு. இதேபோன்று ஒருவரின் அறுபதாவது பிறந்தநாள் (சஷ்டியப்த பூர்த்தி), எழுவதாவது பிறந்தநாள் (பீஷ்ம சாந்தி) மற்றும் எண்பதாவது பிறந்த நாள் (சதாபிசேகம்) சிறப்பாகக் கொண்டாடப்படுவதுண்டு. அறுபதாவது பிறந்தநாளன்று மனைவிக்கு மறுதாலி அணிவிப்பதால் சில நேரங்களில் இது அறுபதாம் கல்யாணம் எனவும் அழைக்கப்படுகிறது. எண்பதாவது பிறந்தநாளுக்கு அண்மித்து ஒருவர் ஆயிரம் பிறைகள் காணும் வாய்ப்புள்ளதால் இவர்கள் ஆயிரம் பிறை கண்டோர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

Thumb
ஒரு குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்றைய தலைமுறையில் இந்து சமயத்தினரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படியான தங்கள் பிறந்த தேதியிலேயே பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். மேற்கத்தியப் பண்பாட்டின்படி பிறந்தநாள் கேக் வெட்டி மெழுகுவர்த்திகளை அணைத்து விருந்துடன் கொண்டாடுகின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் நிறுவனர் அல்லது தெய்வங்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடுவதுடன் சமூக/அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களையும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads