சந்திர நாட்காட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திர நாட்காட்டி (Lunar Calendar) சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியாகும். மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் முழுமையான சந்திர நாட்காட்டி இசுலாமிய நாட்காட்டி அல்லது ஹிஜிரி நாட்காட்டி ஆகும். இந்த நாட்காட்டி எப்போதுமே 12 சந்திர மாதங்கள் கொண்டது. இத்தகைய சந்திர நாட்காட்டிகளின் முதன்மை விடயம் இவை பருவகாலங்களுடன் ஒத்துக்கொள்ளாமையும் ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் (நெட்டாண்டுகளில் 12 நாட்கள்)தள்ளிப்போவதும் ஆகும். சூரிய நாட்காட்டியுடன் ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணையும், இது பெரும்பான்மையும் சமய வழிபாடுகளுக்கு மட்டுமே பாவித்தாலும் சவுதி அரேபியாவில் வணிக பயன்பாட்டிற்கும் பாவிக்கப்படுகிறது.
ஓர் சந்திர ஆண்டில் 354.37 நாட்கள் உள்ளன.
இசுலாமிய நாட்காட்டியைத் தவிர்த்து பிற சந்திர நாட்காட்டிகளும் உண்மையில் சூரியசந்திர நாட்காட்டிகள் ஆகும். அதாவது மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும், கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன.
சீன, எபிரேய, இந்து நாட்காட்டிகள் சூரியசந்திர நாட்காட்டிகளாகும்.
Remove ads
விழாக்கள்
பன்னாட்டு அளவில் அன்றாட பயன்பாட்டுக்குக் கிரெகொரியின் நாட்காட்டியே பயன்படுகின்றது. எனினும், மதம் சார்ந்த பண்டிகைகள்/விழாக்களுக்கு, உலக அளவில் சந்திர நாட்காட்டி அல்லது சூரியசந்திர நாட்காட்டியையே பின்பற்றுகின்றனர். உதாரணத்திற்கு
- ரமலான் (இசுலாமிய நாட்காட்டி)
- தீபாவளி (இந்து நாட்காட்டி)
- நேப்பாலிய புது வருடம் (நேப்பாலிய நாட்காட்டி)
- சீன புது வருடம் (சீன நாட்காட்டி)
- சப்பானிய புது வருடம் (சப்பானிய நாட்காட்டி)
Remove ads
ஆண்டு துவங்கும் சந்திர மாதம்
எந்த நாள் ஆண்டின் முதல்நாள் என்பதில் ஒவ்வொரு நாட்காட்டியும் மாறுபடுகிறது.
சீன நாட்காட்டி போன்ற சிலவற்றில் சந்திரனின் பிறை குறிப்பிட்ட நேரவலயத்தில் நேரும் நிகழ்வு மாதத்தின் முதல்நாளாகக் கொள்ளப்படுகிறது.
பெரும்பான்மையான சந்திரநாட்காட்டிகளில், சந்திரனின் பிறைநிலை முதலில் காணப்படும் நேரத்தில் துவங்குகிறது.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
- சந்திர நாட்காட்டியும் கிரகண முன்னறிவித்தலும்
- உலகின் பல இடங்களுக்கான சந்திர நாட்காட்டி - ஆண்டுகள் கி.பி 1000 to 4000
- கூகிள் பொறி - சந்திர நாட்காட்டி காண பரணிடப்பட்டது 2009-08-02 at the வந்தவழி இயந்திரம்
- ஆங்கிலத்தில் சந்திர நாட்காட்டி பரணிடப்பட்டது 2013-01-03 at the வந்தவழி இயந்திரம்
- சந்திர நாட்காட்டியின் சில எடுத்துக்காட்டுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads