பிளாஸ்மோடியம்

From Wikipedia, the free encyclopedia

பிளாஸ்மோடியம்
Remove ads

கணிகவுயிரி (Plasmodium) முதலுயிரித் தொகுதியைச் சேர்ந்த பேரினம் ஆகும். இந்த இனத்தைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் மலேரியா நோய்க்குக் காரணமானவை. இவை மனிதர்களைத்தவிர, பறவைகள், ஊர்வன மற்றும் எலிகளையும் தாக்குகின்றன.[1]

விரைவான உண்மைகள் பிளாஸ்மோடியம், உயிரியல் வகைப்பாடு ...

இவ்வுயிரி ஓர் அகக் குருதிக்கல ஒட்டுண்ணியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்சிக்கென ஓர் முதுகெலும்பியும், குருதி உறிஞ்சும் கொசுக்களும் தேவைப்படுகின்றன.

1898ஆம் ஆண்டு ரொனால்ட் ராஸ் என்பவர் குலெக்சுவகைக் கொசுக்களில் கணிகவுயிரி உள்ளதை நிறுவினார். இதற்காக அவருக்கு 1902ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜியோவன்னி பாட்டிசுட்டா கிராசி என்ற இத்தாலிய பேராசிரியர் அனபிலசு கொசுக்கள் மட்டுமே மனிதர்களிடையே மலேரியா நோயைப் பரப்பவல்லது என கண்டறிந்தார்.

Remove ads

வாழ்க்கைச் சுழற்சி

Thumb
மலேரியா நோயை உருவாக்கும் கணிகவுயிரி எனப்படும் அதிநுண்ணுயிரியின் வாழ்க்கை வட்டம்

கணிகவுயிரியின் வாழ்க்கை வட்டத்தில், மனிதர்கள் இடைநிலை விருந்தோம்பிகளாகவும், கொசுக்கள் நிலையான விருந்தோம்பிகளாகவும் செயல்படுகின்றன.[2]

பெண் அனபிலசு கொசுக்கள் முதுகெலும்பிகளைக் கடிக்கும்போது, அதன் உமிழ் நீர் வழியாக ஆயிரக்கணக்கான கதிர்வடிவ செதிலுயிர்க்கலங்கள் குருதியில் கலக்கின்றன. பின்பு, கல்லீரலின் உட்புறமுள்ள இழைவலை அகப்படலத்தின் (reticuloendothelial) உயிர்க்கலங்களில் தங்குகின்றன. இங்கு அமைதியாக தங்கியிருக்கும் செதிலுயிர்க்கலங்கள் மறைவுயிர்க்கல்ங்கள் என அழைக்கப்படுகிறது.[3]

கல்லீரலில் இவை கரவுயிர்க்கலங்களாக உருமாறி, பாலில்லா இனப்பெருக்கமுறையால் ஆயிரக்கணக்கான நுண்ணிய மஞ்சட்கரு உயிர்க்கலங்களாக குருதியில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன.[3]

சிவப்பணுக்களுள், இவை உணவுயிர்க்கலங்களாக வளர்கின்றன. இதன் மையத்தில் தோன்றும் நுண்குமிழி, உட்கருவை ஓரத்திற்குத் தள்ளி, மோதிர அமைப்பைப் பெறுகிறது. இதன் பின் சைசாண்டு நிலையில், சைசாண்டுகள் பலவாகப் பிளந்து பல்லாயிரக்கணக்கான மஞ்சட்கருவுயிர்க்கலங்களாக மாறி சிவப்பணுக்களிலிருந்து வெளியேறி குருதியில் கலக்கின்றன. பல மஞ்சட்கருவுயிர்க்கலங்கள் இந்த சுழற்சியில் மேலும் பெருக்கின்றன. பல சுழற்சிக்குப்பின் சில மஞ்சட்கருவுயிர்க்கலங்கள் பாலினக்கலங்களாக (gametocyte) உருப்பெறுகின்றன. இந்தப் பாலினக்கலங்கள் கொசுக்களால் உறிஞ்சப்படுகின்றன.

பாலினக்கலங்கள் கொசுக்களுள் பாலணுக்கள் எனும் இனப்பெருக்கக் கலங்களாகின்றன. இவை ஒருங்கிணைந்து கருமுட்டை உருவாகின்றது. இவை நகரும் தன்மையுடையதால், நகரும் கருமுட்டைகள் (ookinetes) எனப்படுகின்றன. இரைப்பையின் சுவரைத் துளைத்துக் வெளிவரும் கருமுட்டை, தொடருந்து பிளந்து பல நுண்ணிய கதிர்வடிவ செதிலுயிற்கலங்களாக உருமாறுகின்றி, கொசுவின் உமிழ் நீர் வழியாக மீண்டும் முதுகெலும்பியின் குருதியில் கலக்கின்றன.

மஞ்சட்கருவுர்க்யிகலங்கள் சிவப்பணுக்களிலிருந்து வெளியேறும் பொழுது குருதியில் கலக்கும் நச்சுப் பொருட்களே மலேரியா காய்ச்சலுக்குக் காரணமாகும்.[4]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads