பீர்த்தனா
அரியானா மாநில கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீர்த்தனா (Bhirrana, also Bhirdana and Birhana,) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள பத்தேகாபாத் மாவட்டத்தில் உள்ள சிந்துவெளி நாகரீத்தின் தொல்லியல் களம் கொண்ட சிறு கிராமம் ஆகும்.[1][2]
பீர்த்தனா தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்ததில், இதன் வரலாறு அரப்பா நாகரிகத்திற்கு முந்தைய காலத்திற்கு நீண்டுள்ளது என வெளிப்பட்டுள்ளது.
Remove ads
அமைவிடம்
இத்தொல்லியல் களம் புதுதில்லிக்கு வடகிழக்கே 220 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான பதேகாபாத் நகரத்திற்கு வடகிழக்கே 14 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பீர்த்தனா தெல்லியல் மேடு வடக்கு-தெற்கே 190 மீட்டரும்; கிழக்கு-மேற்கே 240 மீட்டரும்; 5.50 மீட்டர் உயரமும் கொண்டது.
Remove ads
அகழ்வாய்வுகள்
பீர்த்தனா தொல்லியல் மேட்டின் மூன்று களங்களை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 2003-04, 2004–05 மற்றும் 2005-06 ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்தது.
காலம்
பீர்த்தனா தொல்லியல் களம் அரப்பாவிற்கு முந்தைய, கிமு 7,500 முதல் கிமு 6,200 வரை நிலவிய அக்ரா மட்பாண்டப் பண்பாடு காலத்திற்குரியது என தொல்லியல் அறிஞர் இராவ் கூறுகிறார்.[3][4][5] பீர்த்தனா தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களின் கரிமக் காலக் கணிப்பின்படி, கிமு 7570-7180 முதல் கிமு 6689-6201 வரையானது என நிறுவப்பட்டுள்ளது.[3][4]
பண்பாடு
பீர்த்தனா தொல்லியல் கள அகழ்வாய்வில் இப்பகுதியில் முதலில் அக்ரா மட்பாண்டப் பண்பாடும் பின்னர் துவக்க கால மற்றும் முதிர்ந்த அரப்பா பண்பாடு, நிலவியதாக அறியப்படுகிறது.[3][4][5]
தொல்பொருட்கள்
கடற்கன்னி போன்ற தேவதைகள் மற்றும் பெண்கள் உருவம் பதித்த மட்பாண்டங்களும் கிடைத்துள்ளது.[1][6][7]
பிற தொல்பொருட்கள்
வண்ண ஆரங்களுடன் கூடிய சுடுமண் சக்கரங்கள் இத்தொல்லியல் களத்தில் கிடைத்துள்ளது.[8] ஆற்றாங்கரை குழைவுமண் பகுதியில் மக்கள் சடங்குகள் செய்வதற்கும், மட்பாண்டத் தொழிலுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.[6] பல அறைகள் கொண்ட வீடுகள் பீர்த்தனா தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒரு வீடு 10 அறைகளுடனும், ஒரு வீடு 3 அறைகளுடனும் இருந்தது. வீடுகள் சமயலறை, சமையல் அடுப்புகள், அரைத்த தானியங்கள் மற்றும் முற்றவெளி கொண்டிருந்தது.[6] பொதுவாக சிந்துவெளி நாகரிகம் பீர்த்தனா பகுதியில் நிலவியதாக அறியப்படுகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads