புக்கிட் நானாஸ்

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள ஒரு சிறிய குன்றுப் பகுதி From Wikipedia, the free encyclopedia

புக்கிட் நானாஸ்map
Remove ads

புக்கிட் நானாஸ் அல்லது வெல்ட் மலை (மலாய்; ஆங்கிலம்: Bukit Nanas; (Weld Hill) சீனம்: 咖啡山) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள ஒரு குன்றுப் பகுதி ஆகும். இந்தக் குன்று 94 மீட்டர் (308 அடி) உயரத்தில் உள்ளது.[1] எனினும், கோலாலம்பூர் வாழ் மக்கள் இதை புக்கிட் நானாஸ் மலை என நீண்ட காலமாக அழைத்து வருகின்றனர்.

விரைவான உண்மைகள் புக்கிட் நானாஸ் Bukit NanasWeld Hill, நாடு ...

கோலாலம்பூரின் மையப் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே வெப்பமண்டல மழைக்காடு இங்குதான் உள்ளது. புக்கிட் நானாஸ் வனக் காப்பகம் (Bukit Nanas Forest Reserve) இங்கு அமைந்துள்ளது. மேலும் அது பொதுமக்களின் செயல்பாடுகளுக்குத் திறந்துவிடப்பட்டு உள்ளது.

புக்கிட் நானாஸ் வனக் காப்பகத்தில் காட்டுப் பாதைகள், பார்வையாளர் மையம் மற்றும் வனவியல் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. கோலாலம்பூர் கோபுரம் போன்ற குறிப்பிடத்தக்க பல கட்டிடங்கள் புக்கிட் நானாஸில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் 8  MR8  புக்கிட் நானாஸ் நிலையம்; மற்றும் 5  KJ12  டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்கள் சேவை செய்கின்றன.

Remove ads

வரலாறு

Thumb
புக்கிட் நானாஸ் (2006)

கோலாலம்பூரில் உள்ள தொடக்கக்கால மலாய் குடியேற்றங்களில் ஒன்றாக புக்கிட் நானாஸ் அறியப்படுகிறது. 1857-ஆம் ஆண்டில், கிள்ளான் ராஜா அப்துல்லா (Raja Abdullah of Klang), அம்பாங் பகுதியில் ஈயச் சுரங்கங்களைத் திறக்க நிதி திரட்டினார். அவ்வாறு செய்ததன் மூலம் அவர் கோலாலம்பூரை ஒரு பெரிய குடியேற்றமாக மேம்படுத்தினார்.

அம்பாங் பகுதி கிள்ளான் ஆற்றின் கரையில் இருந்தது. அப்போது கிள்ளான் ஆறு உள்நாட்டு ஈயச் சுரங்கங்களுக்குச் சேவை செய்யும் வழித்தடமாக இருந்தது.

அம்பாங் பகுதியில் தம் அதிகாரத்தை வலுப்படுத்த, ராஜா அப்துல்லா தம்முடைய பூகிஸ் தளபதி சியாபண்டார் யாசே (Syahbandar Yaseh) என்பவரை ஆயுதமேந்திய ஆட்களுடன் கோலாலம்பூருக்கு அனுப்பினார். 1860-களில், தளபதி யாசே ஒரு தற்காப்பு அரணைக் கட்டுவதற்கு, புக்கிட் நானாஸ் பகுதியை ஒரு பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுத்தார்.[2]

Remove ads

பிராங்க் சுவெட்டன்காம்

1875-ஆம் ஆண்டு சர் பிராங்க் சுவெட்டன்காம் என்பவரால் கோலாலம்பூரின் வரைபடம் வரையப்பட்டது. அதில் ஒரு மலையில் மலாய் ராஜாவின் வீடு என்று குறிக்கப்பட்ட ஓர் இடம் இருந்தது. அந்த இடம் புக்கிட் நானாஸாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[2]

இந்த இடம் முதலில் புக்கிட் கோம்பாக் (Bukit Gombak) என்று அழைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பின்னர், இந்த இடம் புக்கிட் நானாஸ் என்று அறியப்பட்டது. மற்றொரு வரலாற்றுக் கதையின்படி, தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக மலையைச் சுற்றி அன்னாசிச் செடிகள் (மலாய்: நானாஸ்) வளர்க்கப்பட்டன என்றும் அறியப்படுகிறது.

ராஜா அசால் (Raja Asal) [3] என்பவரால் கிள்ளான் போர் தொடங்கப்பட்டது. ராஜா அசால், கிள்ளானில் இருந்து புக்கிட் நானாஸ் பகுதிக்குப் படை எடுத்து வரலாம் என்பதால் அங்கு அன்னாசிச் செடிகள் வளர்க்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. எனவே, அதன் காரணமாக அந்த இடத்திற்கு புக்கிட் நானாஸ் அல்லது அன்னாசி மலை (Pineapple Hill) எனும் பெயர் அமையப் பெற்று இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.[2]

Remove ads

இன்றைய நிலை

Thumb
புக்கிட் நானாஸ் பெண்கள் பள்ளி (2007)
Thumb
செயிண்ட் ஜான்ஸ் கல்வி நிலையம் (2007)

1906-ஆம் ஆண்டில், புக்கிட் நானாஸ் மலைப் பகுதியில் 17.5 எக்டேர் நிலம் வனப் பகுதியாக அரசிதழில் வெளியிடப்பட்டது. இருப்பினும், கோலாலம்பூர் கோபுரத்தின் மேம்பாட்டிற்காகவும் பிற நோக்கங்களுக்காகவும் பெரிய அளவிலான நிலப் பகுதிகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது 9.3 எக்டேர் வனப்பகுதி மட்டுமே எஞ்சி உள்ளது.[4]

புக்கிட் நானாஸ் மலைப் பகுதி, தொடக்கத்தில் பக்கெட் வெல்ட் வனப்பகுதி (Bucket Weld Forest Reserve) என்று அழைக்கப்பட்டது, பின்னர் புக்கிட் நானாஸ் வனப்பகுதி என மறுபெயரிடப்பட்டது. தற்போது கேஎல் வன சுற்றுச்சூழல் பூங்கா (KL Forest Eco Park) என்று அழைக்கப்படுகிறது.[5]

பிரித்தானிய மலாயா

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரித்தானிய மலாயாவின் குடியேற்றவியக் காலத்தில் இரண்டு பள்ளிகள் இந்த மலையில் கட்டப்பட்டன. செயிண்ட் ஜான்ஸ் கல்வி நிலையம் (St. John's Institution) முதலில் 1904-இல் நிறுவப்பட்டது; பின்னர் புக்கிட் நானாஸ் பெண்கள் பள்ளி (Convent Bukit Nanas) நிறுவப்பட்டது.

செயிண்ட் ஜான்ஸ் கல்வி நிலையம் மத்திய அரசாங்கத்தால் தேசிய பாரம்பரியத் தளமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.[6][7]புக்கிட் நானாஸில் உள்ள மற்றொரு அடையாளமாக ரோமன் கத்தோலிக்க செயிண்ட் ஜான்ஸ் தேவாலயம் (St John's Cathedral|) உள்ளது.[8]

தொங்கூர்தி சேவை

1970-களில் புக்கிட் நானாஸ் மலைப் பகுதியில் ஒரு கம்பிவட ஊர்தி (Cable car) சேவை தொடங்கப்பட்டது. ஆனால், அது 1980-களில் நிறுத்தப்பட்டது. ஆகத்து 2012-இல் கம்பிவட ஊர்தி புனரமைப்பு செய்யப்பட்டபோது புக்கிட் நானாஸ் மலைப் பகுதியின் வனப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூடப்பட்டது.

அதன் பின்னர், சிறிது காலம் கழித்து, புக்கிட் நானாஸ் காட்டுப் பாதை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இருப்பினும், சனவரி 2017 வரையில் கம்பிவட ஊர்தி சேவை மட்டும் நிறைவு அடையவில்லை.[9]

1996-ஆம் ஆண்டில், உலகின் ஏழாவது உயரமான தொலைத்தொடர்பு கோபுரமான கோலாலம்பூர் கோபுரம் இந்த மலையில்தான் கட்டப்பட்டது. அத்துடன், 8  MR8  புக்கிட் நானாஸ் நிலையம் 2003-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

Thumb
புக்கிட் நானாஸ் பரந்த காட்சி

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads