புக்கிட் நானாஸ் நிலையம்

கோலாலம்பூர், சுல்தான் இசுமாயில் சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் ஒற்றைத் தண்டூர்த From Wikipedia, the free encyclopedia

புக்கிட் நானாஸ் நிலையம்map
Remove ads

புக்கிட் நானாஸ் நிலையம் அல்லது புக்கிட் நானாஸ் மோனோரெயில் நிலையம் (ஆங்கிலம்: Bukit Nanas Station; மலாய்: Stesen Raja Chulan; சீனம்: 拉惹朱兰站) என்பது மலேசியா, கோலாலம்பூர், சுல்தான் இசுமாயில் சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும். இந்த நிலையம் முன்னர் பி. ராம்லி மோனோரெயில் நிலையம் என்று அழைக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் MR8 புக்கிட் நானாஸ், பொது தகவல்கள் ...

இந்த நிலையம் கோலாலம்பூர் தங்க முக்கோணத்தின் (Kuala Lumpur Golden Triangle) வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. புக்கிட் பிந்தாங் என்பது முன்பு கோலாலம்பூர் தங்க முக்கோணம் என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், இந்த நிலையம் அம்பாங்கின் மேற்கு முனையில் அமைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

புக்கிட் நானாஸ் அருகே கட்டப்பட்டதால், இந்த நிலையத்திற்கும் புக்கிட் நானாஸ் நிலையம் என பெயரிடப்பட்டது. கோலாலம்பூர் கோபுரம், ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையம்; மற்றும் ஒரு வனப்பகுதி; ஆகியவை இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளன. இந்த நிலையம் சுல்தான் இசுமாயில் சாலையின் மேலே அமைந்துள்ளது.

Remove ads

பொது

இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[3] கோலாலம்பூர் தங்க முக்கோணப் பகுதிக்குச் சேவை செய்யும் நான்கு கோலாலம்பூர் மோனோரெயில் நிலையங்களில் புக்கிட் நானாஸ் மோனோரெயில் நிலையமும் ஒன்றாகும்.

இந்த நிலையத்தின் அமைவிடம் காரணமாக, பொதுவாக நெரிசல் நேரங்களில்; பொது விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள்; மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இந்த நிலையம் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் பயணிகள் பலர் கோலாலம்பூர் கோபுரத்தை அடைய இந்த நிலையத்தைப்ப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த நிலையம் பல வணிக நிறுவனங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளது.

Remove ads

அருகாமை நிலயங்கள்

அருகாமையில் உள்ள நிலையங்கள்:[4]

இவற்றைத் தவிர, இந்த நிலையத்திற்கு வடக்கே 1 கிமீ தொலைவில்  MR9  மேடான் துவாங்கு நிலையம் உள்ளது.[4]

நிலைய தள அமைப்பு

L2 தள நிலை பக்க மேடை
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR11  தித்திவங்சா நிலையம் (→)
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR1  கோலாலம்பூர் சென்ட்ரல் (←)
பக்க மேடை
L1 இணைப்புவழி கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, இணைப்புவழி, கட்டணமில்லாத பகுதி, நகரும் பாதை ⇌ தெரு நிலை. நுழைவாயில் B
G தெரு நிலை சுல்தான் இசுமாயில் சாலை; கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A & C

இந்த நிலையத்தில் 2 வெளியேறும் வழிகள் உள்ளன. அருகிலுள்ள ராஜா சூலான் நிலையத்தைப் போலவே, இந்த புக்கிட் நானாஸ் நிலையமும், பல்வேறு கடைவல மையங்களுக்கு நடந்து செல்லும் தொலைவில்ல் உள்ளது.

காட்சியகம்

புக்கிட் நானாஸ் நிலையக் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads