புரசைவாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
புரசைவாக்கம், சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். புரசைவாக்கம், 'புரசை' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு, குடியிருப்புப் பகுதிகளும், வணிக வளாகங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
புரசையின் கவர்ச்சியில் அபிராமி மெகா மாலும் ஒன்று. இம்மாலில் நிறைய கண்கவரும் கடைகளும் உள்ளன.
Remove ads
போக்குவரத்து
புரசைவாக்கத்தின் அருகில் எழும்பூர், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையங்கள் உள்ளன. மாநகரப் பேருந்துகள், நகரின் பிற பகுதிகளுக்கு, புரசைவாக்கம் வழியாக இயக்கப்படுகின்றன.
அருகிலுள்ள ஊர்கள்
எழும்பூர், பெரியமேடு, ஓட்டேரி, சூளை, கீழ்ப்பாக்கம், டவுட்டன், புளியந்தோப்பு, கெல்லீசு, அயனாவரம் ஆகியவை புரசைவாக்கத்திற்கு அருகிலுள்ள முக்கிய ஊர்கள் ஆகும்.
வழிபாட்டுத் தலங்கள்
- லூதரன் தேவாலயம்
- அடைல்கலநாதர் தேவாலயம்
- புனித அந்திரேயா தேவாலயம்
- புனித பவுல் தேவாலயம்
- புனித மதியா தேவாலயம்
- இம்மானுவேல் மெதடிஸ்ட் தேவாலயம்
- தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம்
- அபோஸ்தல தேவாலயம்
- அப்போஸ்தல ஐக்கிய சபை
மேலும், மிகவும் பழமையான,
- புகழ்வாய்ந்த கங்காதீஸ்வரர் கோவில்,
- சோலை அம்மன் கோவில்
புரசையில் பெயர் பெற்ற கோவில்களாகும்.

மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads