தயாநிதி மாறன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தயாநிதி மாறன் (பிறப்பு: டிசம்பர் 5, 1966) தமிழ்நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007 வரை பொறுப்பு வகித்தார்.[2] பின்னர் இந்தியாவின், நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.[3]
Remove ads
இளமைக் காலம்
இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான முரசொலி மாறனின் மகன் ஆவார். இவரின் மூத்த சகோதரரான கலாநிதி மாறன், சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரும் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி தி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மு.கருணாநிதி ஆவார். இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு பிரியா என்னும் மனைவியும், கரண் மற்றும் திவ்யா என்னும் இரு பிள்ளைகளும் உள்ளனர். இவர் சென்னையில் உள்ள இலயோலாக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். இவர் சென்னை, எழும்பூரிலுள்ள டான் பாசுகோ பதின்மநிலை உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.[சான்று தேவை]
Remove ads
அரசியல் வாழ்க்கை
இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் மத்தியில் தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில் இவருக்குத் தொடர்பிருப்பதாக நடுவண் புலனாய்வுச் செயலகம் குற்றம் சாட்டியதால், ஜூலை 7, 2011 அன்று இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார். இந்தியாவில் பொழுதுபோக்குக்கு வானொலி இயக்கும் இவரது அழைப்புக்குறி (HAM Radio Callsign) VU2DMK என்பதாகும்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்

Remove ads
சாதனைகள்
இவர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றியபோது, அலைபேசிகளுக்கும் தொலைபேசிகளுக்குமான கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு தொலைத்தொடர்பு வளர்ச்சி முன்பைவிட பலமடங்கு உயர்ந்தது.[8] அடித்தட்டு மக்களுக்கும் அலைபேசிகள் செலவிற்குள் வரவியலும்படியானது.
ஊழல் குற்றச்சாட்டுகள்
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு
மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் என்ற மலேசிய நிறுவனத்திடமிருந்து ₹ 700 கோடிகள் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை வெளியிட்ட தெகல்கா இதழ் மீது மாறன் சட்டப்படியான வழக்கு தொடர்ந்தார்.[9]
பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு
நடுவண் புலனாய்வில் சென்னை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை தனது சொந்த வணிக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.[10]
பிற சர்ச்சைகள்
- ஆ. ராசா பொறுப்பேற்ற 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகான அலைக்கற்றை ஊழலை மட்டுமே புலனாய்ந்த நடுவண் புலனாய்வுச் செயலகம், தயாநிதி மாறனின் ஏர்செல்/மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் வணிக பரிமாற்றலையும் ஆராயும் என தெரிவிக்கப்பட்டது.[11][12]
- டாடா குழுமம் ராபர்ட் முர்டோக்குடன் கூட்டணியாக நடத்தி வரும் டாடாஸ்கை நேரடி வீட்டுத்தொலைக்காட்சித் திட்டத்தில் 33% தனது சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனை வெளியிட்ட நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் மன்னிப்புக் கோராவிட்டால் ஒரு கோடி ரூபாய்கள் நட்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப்போவதாக இந்தியன் எக்சுபிரசு, தினமணி மற்றும் ஜெயா தொலைக்காட்சிக்கு அறிவிக்கை கொடுத்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads