புளி (மரம்)
தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புளிய மரம் (Tamarind) (தென்னிலங்கையில் வடுபுளி எனப்படுகிறது). இது பேபேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. புளி தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
Remove ads
இலக்கியக் கண்ணோக்கு
பட்டும் படாமல் புழங்குதலை தமிழ் வழக்கில் ஓடும் புளியம் பழமும் போல என வழங்குவர். ஏனெனில் புளியின் ஓடானது அதன் சதையோடு ஒட்டுவதில்லை.
புளியங் கொட்டை
புளியங் கொட்டையின் பருப்பிலிருந்து புளிய எண்ணை தயாரிக்கப்படுகிறது.[1] அதன் மெல்லிய, கடினமான ஓட்டிலிருந்து பருப்பை பிரிப்பது கடினம். இது ஆளி விதை எண்ணெயைப் போன்ற நிறநிலைப்பத்தன்மையைக் கொண்டுள்ளது. இந்த எண்ணையானது வண்ணப்பூச்சு அல்லது வார்னிஷ் தயாரிக்கப் பயன்படுகிறது.[2] புளியங் கொட்டைப் பொடியானது துணி, சணல் போன்வற்றைப் பதப்படுத்துதலுக்கும், தொழில்துறை பசைகள் தயாரிப்பதற்கு மாற்றும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் புலியங் கொட்டையை வறுத்து ஊறவைத்து உண்பர். புலிகங் கொட்டைகளைக் கொண்டு தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடுவர்.[3]
Remove ads
படக்காட்சியகம்
பயன்பாடுகள்
- புளியம் பழம் - சமையல்.
- புளியம் விதை - பசை தயாரிக்க.
- புளியமரம் - வண்டிச் சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும் பொருட்கள் செய்ய[4]. புளியம் மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை காரணமாக, கசாப்புக் கடைகளில் அடிப்பலகையாக பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads