பூதி விக்கிரம கேசரி (கதைமாந்தர்)
பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூதி விக்கிரம கேசரி, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தின் கதாப்பாத்திரம். இவர் சோழப் பேரரசின் சேனாதிபதியாக ஈழத்துப் படையை நடத்தியவராவர். வரலாற்றில் இடம்பெற்ற யாதவ குல இருக்கு வேளிர் மன்னர் பூதி விக்கிரம கேசரியை சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
Remove ads
கதாப்பாத்திரத்தின் இயல்பு
கொடும்பாளூர்ப் பெரிய வேளாராகிய சேனாதிபதி பூதி விக்கிரம கேசரி வயது முதிர்ந்த அனுபவசாலியாவார். பல போர்க்களங்களில் ஈடுபட்ட அனுபவம் உடையவர். சோழருடன் நெருங்கிய நட்பும் உறவும் பூண்டவர். அவருடைய சகோதரராகிய கொடும்பாளூர்ச் சிறிய வேளார் இலங்கைப் போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைந்தார். அவருடன் சென்ற சைன்யமும் தோல்வியடைந்து திரும்ப நேர்ந்தது. அந்தப் பழியைத் துடைத்துக் கொடும்பாளூரின் வீரப் பிரதாபத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் அவர் பெரிதும் விருப்பம் கொண்டிருந்தார். ஆகையாலேயே சற்று வயதானவராயிருந்தும் ஈழத்துப் போரில் சோழர் படைக்குத் தலைமையேற்று நடத்தினார்.
Remove ads
வந்தியத்தேவனை சிறை செய்தல்
இளவரசர் அருள்மொழிவர்மனுக்கு இளைய பிராட்டி குந்தவை தேவியிடமிருந்து ஓலை கொண்டு வந்த வந்தியத்தேவன், பனை லட்சனையுடைய கனையாளியை சேனாதிபதியிடம் காட்டினான். பழுவேட்டரையர்களுக்கும், கொடும்பாளூர் அரசர்களுக்குமிடையே நெடுங்காலம் பகைமை இருந்ததமையை அவன் அறிந்திருக்கவில்லை. வந்தியத்தேவனை பழூவூரிலிருந்து வந்தவன் என்பதால் சிறைபிடித்தார் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி.
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads