பெசாவர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெசாவர் மாவட்டம் (Peshawar District), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம். பெசாவர் ஆகும். [2]இது பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திற்கு மேற்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
2017 பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெசாவர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 43,31,959 ஆகும். அதில் ஆண்கள் 2,229,681 மற்றும் பெண்கள் 2,101,649 ஆகவுள்ளனர்.[1] The population of the district over the years is shown in the table below.[3][4][5]பெசாவர் மாவட்டத்தின் கிராமப்புற மக்கள் தொகை 2,362,136 (54.53%) மற்றும் நகர்புற மக்கள் தொகை 1,969,823 (45.47%) ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 55.01% ஆகும்.[1]
இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழி 90.32%, இந்த்கோ மொழி 5.25%, உருது மொழி 1.93%, பஞ்சாபி மொழி 1.07% மற்றும் பிற மொழிகள்1.43% மக்களால் பேசப்படுகிறது.
Remove ads
சமயம்
இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 1941-இல் 6.01% இருந்த இந்துக்கள் மக்கள் தொகை 2017-இல் 0.04% ஆக குறைந்துள்ளது.
Remove ads
பெசாவர் மாவட்ட நிர்வாகம்
பெசாவர் மாவட்டம் பெசாவர் நகர தாலுகா மற்றும் 6 கிராமப்புற தாலுக்காக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 30 காவல் நிலையங்கள் உள்ளது. [7].இம்மாவட்டத்தில் 357 உள்ளாட்சி அமைப்புகள் கொண்டுள்ளது.
சட்டமன்றத் தொகுதிகள்
கைபர் பக்துன்வா மாகாணச்ச் சட்டமன்றத்திற்கு பெசாவர் மாவட்டத்திற்கு 11 சட்டமன்ற்த் தொகுதிகள் கொண்டுள்ளது.[8][9]
நாடாளுமன்றத் தொகுதிகள்
பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்திற்கு, பெசாவர் மாவட்டம் 4 உறுப்பினர் தொகுதிகள் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
