பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (Women's One Day International (WODI) பெண்களுக்கான வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம் ஆகும். ஆண்கள் துடுப்பாட்டம் போலவே பெண்களுக்கும் 50 நிறைவுகள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. இங்கிலாந்தில் 1973 ஆம் ஆண்டில் பெண்களுக்கான முதல் ஒருநாள் போட்டி மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. 1000 ஆவது ஒருநாள் போட்டி தென்னாப்பிரிக்க பெண்கள் அணி மற்றும் நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையே அக்டோபர் 13, 2016இல் நடைபெற்றது.[1]

Remove ads

தகுதி பெற்றுள்ள அணிகள்

2006 ஆம் ஆண்டில், ஐ.சி.சி முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு மட்டுமே தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட தகுதி பெறும் என்று அறிவித்தது.அதனால், 2011 மகளிர் துடுப்பாட்ட உலகக் கோப்பை தகுதிப் போட்டியின் போது நெதர்லாந்து தனது ஒருநாள் போட்டியில் விளையாடும் தகுதியினை இழந்தது. நெதர்லாந்து அணிக்குப் பதிலாக வங்காளதேச அணி தகுதி பெற்றது.[2]

தற்போது ஒரு நாள் அந்தஸ்துள்ள நாடுகள்:

பின்வரும் அணிகள் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளன, ஆனால் தற்போது ஒருநாள் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் அந்த நிலையை மீண்டும் பெற அவர்கள் தகுதி பெறலாம்.

  • டென்மார்க் (1989–1999)
  • சப்பான் (2003)
  • நெதர்லாந்து (1984–2011)
  • இசுக்காட்லாந்து (2001–2003)
Remove ads

தரவரிசை

அக்டோபர் 2018 க்கு முன்பு, ஐ.சி.சி பெண்கள் இருபது -20 துடுப்பாட்ப் போட்டிக்கு எனத் தனியாக தரவரிசையை பராமரிக்கவில்லை, அதற்கு பதிலாக விளையாட்டின் மூன்று வடிவங்களுக்குமான செயல்திறனை ஒட்டுமொத்த மகளிர் அணிகள் தரவரிசையில் சேர்த்தது. [3] ஜனவரி 2018 இல், ஐ.சி.சி இணை நாடுகளுக்கிடையேயான அனைத்து போட்டிகளுக்கும் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தகுதியினை வழங்கியதுடன், பெண்களுக்கு தனி இ20 தரவரிசைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. [4]

மேலதிகத் தகவல்கள் Rank, Team ...
Remove ads

அணிகளுக்கான புள்ளிவிரரங்கள்

மேலதிகத் தகவல்கள் அணிகள், ஆண்டு ...


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads