பெரிந்தல்மண்ணை

From Wikipedia, the free encyclopedia

பெரிந்தல்மண்ணைmap
Remove ads

பெரிந்தல்மண்ணை கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்ட நகரமாகும். பெரும்தள்ளு என்பதிலிருந்து இந்தப் பெயர் திரிந்துள்ளது. தமிழகத்தின் பல்லவ ஆட்சியின் கீழ் வள்ளுவகோணாத்திரி என்ற குறுநில மன்னர்கள் ஆண்ட வள்ளுவநாட்டின் தலைநகரமாக விளங்கியது. கோழிக்கோடு, மஞ்சேரி, மலைப்புறம், நீலாம்பூர் மற்றும் பாலக்காடு அருகிலுள்ள பெருநகரங்களாகும்.கிழக்கிந்தியக் கம்பனி மலபார் உடன்படிக்கைப்படி இங்குதான் முதலில் அவர்களது உயர்நிலைப்பள்ளி, நீதிமன்றம், வட்டாட்சி அலுவலகம் ஆகியனவற்றை நிறுவினர். பெரிந்தல்மன்னாவில் நான்கு மருத்துவமனைகளும் ஓர் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. பல நாற்றாண்டுகளாக பெரிந்தல்மன்னா வணிக மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. பெப்ரவரி 10,1990-ஆம் ஆண்டில் நகராட்சியாக உயர்த்தப்பட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள்

ஞானப்பனை என்ற இலக்கிய படைப்பினை அளித்த கவிஞர் பூந்தானம் அவர்களுடைய வீடு, பூந்தானம் இல்லம், பெரிந்தல்மன்னாவிற்கு அருகாமையில் உள்ளது. ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாட்டின் பிறப்பிடமான எலம்குளம் பெரிந்தல்மன்னாவிற்கு வெகு அருகில் உள்ளது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2001 இந்தியக் கணக்கெடுப்பின்படி பெரிந்தல்மன்னாவின் மக்கள் தொகை 44,613. ஆண்கள் 48% மற்றும் பெண்கள் 52%. படித்தவர் விழுக்காடு 81%, நாட்டின் சராசரியான 59.5%வை விடக் கூடுதலாகும: ஆண் படிப்பறிவு 83%, பெண்கள் படிப்பறிவு 79%. ஆறு அகவைக்கும் குறைவானவர் விழுக்காடு 14% ஆகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads