பெரிய இந்திய நெடுவரை வில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரிய இந்திய நெடுவரை வில் (The great Indian arc of the Meridians) என்பது சென்னை பரங்கிமலை, பல்லாவரம் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட முக்கோணம் ஆகும். பின்பு இம்முக்கோணம் கன்னியாகுமரி, இமயம் என்று விரிக்கப்பட்டது. இவ்வில்லை மூலமாகக் கொண்டே இந்திய வரைபடத்தை வில்லியம் லாம்டனும் எவரஸ்டும் வரைந்தனர்.[1]

வரைந்த முறை

ஏப்ரல் 10, 1802இல் பிரிட்டிசு நில அளவையாளர் வில்லியம் லாம்டன் பரங்கிமலையில் இருந்து இந்திய வரைபடத்தை வரையும் முயற்சியை மேற்கொண்டார். பரங்கிமலை, பல்லாவரம் மற்றும் பட்டினப்பாக்கம் மூன்றையும் இணைத்து ஒரு கற்பனை முக்கோணம் உருவாக்கப்பட்டது. பின்பு இது கன்னியாகுமரியில் 78 பாகை மெரிடியனில் தொடங்கி இமயமலை வரை 2575 கி.மீ. தூரம் விரிவடைந்தது. இதற்குள் 50 ஆண்டு காலம் முடிந்துவிட்டது. இதை ஆரம்பித்த லாம்டன் 1823இல் காலமானார். பின்பு இதை லாம்டனின் மாணவரான ஜார்ஜ் எவரஸ்ட் 1880இல் முடித்துவைத்தார்.[2] லாம்டன் பரங்கிமலையில் இதை தொடங்கியதற்கான தூண் தற்போதும் உள்ளது.[3]
Remove ads
ஆண்டசும் இமயமும்
இந்த வரைபட முயற்சியின் மூலமே இமயமலையிலுள்ள சிகரம் ஆண்டசு மலைச்சிகரத்தை விட உயர்ந்தது என்ற உண்மை நிலைநாட்டப்பட்டது. இதற்கு பெருமளவு உதவியது எவரஸ்ட் என்ற லாம்டனின் மாணவராதலால் இவ்விமயமலைச் சிகரம் எவரஸ்ட் என பெயர் பெற்றது. இதை அளவிட உதவிய பொறியியல் கருவிகளையும், முறைகளையும் உருவாக்கி தந்தவர் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணம் ஆர்க்காடு பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சையது உசேன் மொகிசின் என்பவராவார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
