பல்லாவரம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

பல்லாவரம்map
Remove ads

பல்லாவரம் (ஆங்கிலம்: Pallavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் சென்னையின் புறநகர் பகுதியும் ஆகும். இவ்வூரில் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது.[3]

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

பல்லாவரம் காஞ்சிபுரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், எழும்பூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

வரலாறு

பல்லவர்புரம் என்ற பெயர் பின்னர் பல்லாவரம் என்று மாறியது.[4] பல்லாவரம் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

Thumb
பல்லாவரம் குன்று

இவ்வூரின் அமைவிடம் 12.98°N 80.18°E / 12.98; 80.18 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது. அரசு ஆவணங்களில் பல்லவபுரம் என்றே குறிப்பிடப்படும்.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 56,135 குடும்பங்களையும் கொண்ட இப்பகுதியின் மக்கள்தொகை 2.15,417 ஆகும். இப்பகுதியின் எழுத்தறிவு 92.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22258 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 978 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 34,199 மற்றும் 1,031 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.51%, இசுலாமியர்கள் 6.92% , கிறித்தவர்கள் 9.12% , தமிழ்ச் சமணர்கள் 0.15%, மற்றும் பிறர் 0.93% ஆகவுள்ளனர்.

Remove ads

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்

3 நவம்பர் 2021 அன்று பல்லாவரம் பகுதி தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads