பெரிய நிக்கோபார் தீவு

From Wikipedia, the free encyclopedia

பெரிய நிக்கோபார் தீவு
Remove ads

பெரிய நிக்கோபார் தீவு ( Great Nicobar இந்தி: बड़ा निकोबार, நிக்கோபாரி: टोकिओंग लोंग, Tokieong Long) என்பது இந்தியாவின் நிக்கோபார் தீவுகளில் பெரிய பகுதியாகும். இது சுமத்ரா தீவின் வடக்கில் உள்ளது. இத்தீவு 1045 கி.மீ2 பரப்பளவு உடையது, என்றாலும் இதன் மக்கள் தொகை மிக்க்குறைவாக 9,440 மட்டுமே கொண்டது. இத்தீவு பெருமளவு மழைக் காடுகளைக் கொண்டு காட்டுயிர்களின் புகளிடமாக உள்ளது.

விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...

இத்தீவில்தான் மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம், இந்திரா முனை ஆகியவை உள்ளன. இந்த இந்திரா முனைதான் இந்தியாவின் தென்முனையாக உள்ளது. மேலும் ஐ. என். எஸ். பாஸ் கடற்படை விமான நிலையமும் அதன் அருகே காம்ப்பெல் பே கூட்டு சேவைகள் கீழ் இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அந்தமான் நிக்கோபார் வானூர்தி படைப்பிரிவும் (ஏ. என். சி ) உள்ளன.[1] இதுவே இந்திய படைத்துறையின் தென்கோடி வானூர்தி நிலையமாகும்.[2]

இத்தீவு 2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்க ஆழிப்பேரலையின்போது பெருமளவு பாதிக்கப்பட்டது. அச்சமயம் வெளியுலக தொடர்பிலிருந்து ஒரு நாள்வரை துண்டிக்கப்பட்டிருந்தது.

Remove ads

நிலவியல்

இத்தீவில் அலெக்சாந்ரா, அம்ரித் கவுர், துக்மர், கலாதியா போன்ற பல ஆறுகள் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து ஆறுகளும் தொற்கு அல்லது தென்மேற்கு திசையில் பாய்வது இத்தீவின் நிலப்பரப்பு எப்பக்கம் சாய்ந்துள்ளது என்பதை குறிப்பதா உள்ளது. இத்தீவில் நிறைய மலைத் தொடர்கள் காணப்படுகிறன. இதில் முதன்மையான தொடர் வடக்கு- தெற்காக அமைந்துள்ளது. இத்தொடரில்தான் துய்லியர் மலை உள்ளது, இதுவே கடல் மட்டத்தில் இருந்து 642 மீட்ர் உயரத்தில் உள்ள பகுதியாகும்.[3]

இந்திரா முனை (6 ° 45'10 "வ மற்றும் 93 ° 49'36" கி) என்ற பகுதியே பெரிய நிக்கோபார் தீவு மற்றும் இந்தியாவின் தென்கோடி புள்ளியாக உள்ளது. இந்திரா முனை 26 திசம்பர் 2004 ஆண்டைய ஆழிப்பேரலையின்போது பாதிக்கப்பட்டது. இதனால் இங்கிருக்கும் கலங்கரை விளக்கம் சேதமடைந்திருந்தது. கலங்கரை விளக்கம் பின்னர் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Remove ads

விலங்குகள்

தீவின் பெரும்பான்மை பகுதி மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகமாக உள்ளது. இப்பகுதி பல அகணிய உயிரிகளான தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் உறைவிடமாக உள்ளது. இங்குள்ள சில குறிப்பிடத்தக்க உயிரினங்கள் நிக்கோபார் ஸ்குருப்பலோ பறவை, எடிபிலி-கூட்டு ஸ்விஃப்லிட், நிக்கோபார் நீண்ட வால் குரங்கு, உவர்நீர் முதலை, பேராமை, மலேய பெட்டி ஆமை , நிக்கோபார் மர மூஞ்சூறு , இராச மலைப்பாம்பு, தேங்காய் நண்டு ஆகியவை ஆகும்.

Remove ads

மக்கள் தொகை

இந்த தீவு ஷோம்பென் மக்களின் தாயகமாக உள்ளது.[4]

போக்குவரத்து

இங்கு கிழக்கு கடற்கரையில் 915மீ விமான ஓடுபாதை உள்ளது.[5][6]

  • கப்பல்துறை: இங்கு உள்ள கேம்போல் வளைகுடாவில் ஒரு சிறிய துறைமுகம் உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads