பெர்ச்சாம்

மலேசியா, பேராக் மாநிலத்தில், ஈப்போ மாநகரத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகரப் பகுதி ஆகும். From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெர்ச்சாம் (Bercham) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், ஈப்போ மாநகரத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகரப் பகுதி ஆகும். மாநகரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் கிழக்கே அமைந்து உள்ளது. இது வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஈப்போ தெற்கு சந்திப்பிற்கும் ஈப்போ மாநகரத்திற்கும் இடையில் அமைந்து உள்ளது.

விரைவான உண்மைகள் பெர்ச்சாம்Bercham பேராக், நாடு ...

இந்த நகரம் தாசெக், தம்பூன் மற்றும் தஞ்சோங் ரம்புத்தான் நகரங்களுக்கு அருகிலும் உள்ளது. கிந்தா ஆறுக்கு அருகில் முன்பு இருந்த ஈயச் சுரங்கப் பகுதிகளில் மையம் கொண்டு உள்ளது. பெர்ச்சாம் நகரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்பு மலைகள் உள்ளன.

Remove ads

பொது

1850-ஆம் ஆண்டுகளில் பெர்ச்சாம் நகரம் ஓர் ஈயச் சுரங்க நகரமாகத் தன் பயணத்தைத் தொடங்கியது. பின்னர் ஈயப் படிவுகள் இங்கே படிப்படியாகக் குறைந்து விட்டன. அதனால் தற்போதைய நிலைக்கு ஒரு வணிக மையமாக மாற்றம் கண்டு வருகிறது.[1]

இந்த நகரத்தின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். குடியிருப்பு பகுதிகள் கட்டப்பட்ட பின்னர், மலாய்க்காரர்களும் இந்தியர்களும் இங்கு வரத் தொடங்கினார்கள்.

புதிய வணிக மையம்

இங்குள்ள மக்களின் பொருளாதாரம் பெரும்பாலும் வணிகத்தைச் சார்ந்து உள்ளது. ஏறக்குறைய 99% கடை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சீனர்களால் ஆதிக்கம் செலுத்தப் படுகின்றன.

பெர்ச்சாம் நகரம் ஈப்போவின் புதிய வணிக மையமாக மாறி வருகிறது. பெரிய பேரங்காடி நிறுவனங்களான ஜஸ்கோ, டெஸ்கோ, டெஸ்கோ எக்ஸ்ட்ரா, பிளாசா கிண்டா போன்றவை இங்கே தடம் பதித்து விட்டன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads