கிந்தா ஆறு

பேராக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு From Wikipedia, the free encyclopedia

கிந்தா ஆறுmap
Remove ads

கிந்தா ஆறு என்பது (மலாய்: Sungai Kinta; ஆங்கிலம்: Kinta River); மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் முக்கியமான ஓர் ஆறு ஆகும். ஏறக்குறைய 100 கி.மீ. நீளம் கொண்டது.

விரைவான உண்மைகள் கிந்தா ஆறு Kinta River, அமைவு ...

பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போவைச் சுற்றி உள்ள கிந்தா பள்ளத்தாக்கின் (Kinta Valley) பெயரில் இருந்து இந்த ஆறும் அதன் பெயரைப் பெற்றது. ஈப்போ நகரை இந்த ஆறு இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது.[2]

Remove ads

பொது

பேராக் ஆற்றின் துணை ஆறான கிந்தா ஆறு; கிளேடாங் மலைத் தொடருக்கு இடையில் பாய்ந்து செல்கிறது. இந்த இடத்தில் தான் இந்தக் கிந்தா பள்ளத்தாக்கு உள்ளது.

கிந்தா பள்ளத்தாக்கு என்பது கிந்தா மாவட்டம்; கம்பார் மாவட்டம்; கோலாகங்சார் மாவட்டம்; பேராக் தெங்ஙா மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைந்து உள்ள ஒரு பள்ளத்தாக்குப் பகுதி ஆகும்.

சுண்ணாம்பு மலைகள்

ஈப்போ மாநகரம் கிந்தா பள்ளத்தாக்கின் நடு மையத்தில் அமைந்து உள்ளது. நகரத்தைக் கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. இந்தக் கிந்தா ஆற்றுடன் சுங்கை பிஞ்சி, சுங்கை பாரி எனும் இரு துணை ஆறுகளும் இணைந்து கொள்கின்றன.[3]

ஈப்போ நகரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் நிறைய உள்ளன. சுண்ணாம்பு மலைகள் குடையப்பட்டு அங்கிருந்து சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப் படுகின்றன. அவை சிமெண்டு தயாரிக்க உதவுகின்றன. ஈப்போவைச் சுற்றிலும் சிமெண்டு ஆலைகள் உள்ளன.[3][4]

கிந்தா பள்ளத்தாக்கு

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு ஆகும். இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் உலக மக்களின் பார்வை அங்கே திரும்பியது.

1920-ஆம் ஆண்டுகளில் ஈப்போ ஒரு மாபெரும் ஈயப் பட்டணமாக உருவெடுத்தது. ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது.[5]

Remove ads

கிந்தா ஆற்றை ஒட்டிய குடியிருப்புகள்

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads