பெர்மாங்கனிக் அமிலம்

வேதிச்சேர்மம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெர்மாங்கனிக் அமிலம் (Permanganic acid) என்பது HMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த வலிமையான ஆக்சோ அமிலம் இருநீரேற்றாக தனித்துப் பிரிக்கப்படுகிறது. பெர்மாங்கனேட்டு உப்புகளுக்கு இணையமிலமாக இச்சேர்மம் செயல்படுகிறது. இவ்வமிலத்தின் பண்புகள் மற்றும் பயன்கள் மிகக் குறைவாக இருப்பதால் இச்சேர்மம் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு

நீர்த்த கந்தக அமிலத்தை பேரியம் பெர்மாங்கனேட்டு கரைசலுடன் சேர்த்து வினைப்படுத்தி பெரும்பாலும் பெர்மாங்கனிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. உடன் விளைபொருளாக உருவாகும் கரையாத பேரியம் சல்பேட்டு வடிகட்டுதல் முறையில் நீக்கப்படுகிறது :[1]

Ba(MnO4)2 + H2SO4 → 2 HMnO4 + BaSO4

இவ்வினைக்குப் பயன்படுத்தப்படும் கந்தக அமிலம் கண்டிப்பாக நீர்த்த அமிலமாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் தேவை. ஏனெனில் அடர் கந்தக அமிலம் பெர்மாங்கனேட்டுகளுடம் வினைபுரிந்தால் விளைபொருளாக ஒரு நீரிலியும் மாங்கனீசு ஏழாக்சைடும் உருவாகிவிடும்.

ஐதரோபுளோரோசிலிசிக் அமிலத்துடன் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டைச்[2] சேர்த்து மின்னாற்பகுப்பு [1] முறையிலும், மாங்கனீசு ஏழாக்சைடை நீராற்பகுத்தும் கூட பெர்மாங்கனிக் அமிலம் தயாரிக்கலாம்.[1]

படிகபெர்மாங்கனிக் அமிலத்தை குறைவான வெப்பநிலையில் இருநீரேற்றுகளாகத் (HMnO4•2H2O) தயாரிக்கலாம்.[3]

அலைமாலை முறை அல்லது படிகவுருவியல் முறையில் பெர்மாங்கனிக் அமிலத்தின் கட்டமைப்பு நிருபிக்கப்படவில்லை. ஆனால், HMnO4 சேர்மம் பெர்குளோரிக் அமிலத்தின் பண்பொத்த நான்முக வடிவம் ஏற்றுள்ளது என அனுமானிக்கப்படுகிறது.

Remove ads

வினைகள்

ஒரு வலிமையான அமிலமாக HMnO4 புரோட்டான் இறக்கம் அடைந்து கருஞ்சிவப்பு நிற பெர்மாங்கனேட்டுகளாக உருவாகிறது. பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு பரவலாக பல்வேறு காரணங்களுக்காகவும் வலிமையான ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது.

பெர்மாங்கனிக் அமிலக் கரைசல்கள் நிலைப்புத் தன்மை குறைந்தவையாகும். படிப்படியாக இவை மாங்கனீசு டை ஆக்சைடு ஆக்சிசன், நீர் எனச் சிதைவடைகின்றன. தொடக்கத்தில் உருவாகும் மாங்கனீசு டை ஆக்சைடு இச்சிதைவு வினைக்கு வினையூக்கியாகச் செயல்பட்டு மேலும் சிதைவடைதலை தொடர்ந்து நிகழ்த்துகிறது.[4]

2 HMnO4 + MnO2 → 3 MnO2 + H2O + 3/2 O2

சிதைவு வினையானது வெப்பம், ஒளி மற்றும் அமிலங்களால் முடுக்கப்படுகிறது. அடர் கரைசல்கள் சிதைவடைதல் வினையை மேலும் விரைவாக நிகழ்த்துகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads