பேயூ திரைக்கம்பளம்

From Wikipedia, the free encyclopedia

பேயூ திரைக்கம்பளம்
Remove ads

பேயூ திரைக்கம்பளம் (Bayeux Tapestry) நோர்மானிய மன்னர் வில்லியமின் வெற்றிகரமான இங்கிலாந்து ஆக்கிரமைப்பு மற்றும் அதன் திட்டமிடலை விளக்கும் நூல்வேலைப்பாட்டுக் கம்பளம் ஆகும். கி.பி. 1066, அக்டோபர் 14 இல், கேசுட்டிங்கில் நடைபெற்ற போரில் வில்லியம், இங்கிலாந்தின் கெரால்டு மன்னரைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியதை விளக்குவதுடன் இக்கம்பளம் முடிவடைகிறது. 70 மீ நீளமும் 50 செ.மீ அகலமும் (231 அடி நீளம், 19.5 அங்குலம் அகலம்) கொண்ட இக் கைவேலைப்பாட்டுத் துணியே வரலாற்றின் முதல் சித்திரப்படம் (காட்டூன்) ஆகும்.[1]. இக்கம்பளத்தில் மொத்தம் 72 காட்சிகளும், 1512 உருவங்களும், காட்சிகளை விவரிக்கும் இலத்தீன் பதிவுகளும் உள்ளன.[2]

Thumb
இறந்த நிலையில் கெரால்டு மன்னன்
Remove ads

வரலாறு

பேயூ திரைக்கம்பளத்தினை உருவாக்கியவர் யார் என்ற விபரமோ, உருவாக்கிய ஆண்டோ எங்கும் அதிகாரப்பூர்வமாய் இல்லையென்றாலும், இங்கிலாந்தின் முதலாம் வில்லியமின் மனைவி பிளான்டர்சின் மாட்டில்டாவாக இருக்கலாம் என்று பழங்கதைகள் கூறுகின்றன. கி.பி. 1476 இல் பேயூ பேராலயத்தின் கருவூலப் பொருட்களைப் பட்டியலிட்டபோது, ஏனையப் பலிப்பீடத் துணிகளின் ஊடே இந்த கம்பளம் இருந்ததாக முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக பதிவாயிற்று.

கி.பி. 1476 குறிப்பு: குறுகிய அகலமும், நெடுநீளமும் உடைய எழுத்து மற்றும் படங்களுடன், இங்கிலாந்து கைப்பற்றப்பட்டதை சித்தரிக்கும் கைவேலைப்பாட்டுத் துணி, இது கோயிலின் நடுக்கூடம் மற்றும் பீடத்தை சுற்றி தொங்கவிடப்படுவது.[3]

கி.பி. 1562 இல் கியூகுநோசுகளால் பேயூவில் ஏற்பட்ட கலகத்தினால், பேயூ பேராலயத்தின் பிற கருவூலப்பொருட்கள் பாதிக்கப்பட்டாலும், பேயூ திரைக்கம்பளம் எந்த சேதத்தையும் அடையவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பின்

18 ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில், நார்மாண்டியின் நிர்வாக அலுவலராக இருந்த நிக்கோலாசு-யோசேப்பு பெளக்கால்ட் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளிலிருந்து, சுமார் 30 அடி நீள படங்களை (ஏழில் ஒரு பங்கு) ஆன்டோயின் லான்சுலாட் என்ற அறிஞர் கண்டுபிடித்தார். பேயூ பேராலயத்தில் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத மறைவான இடத்தில் பேயூ திரைக்கம்பளம் இருந்ததால், அவரால் இந்த படங்களின் மூல ஆதாரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கி.பி. 1724 இல், பாரீசில் உள்ள பதிவு மற்றும் இலக்கிய கல்விக்கழகத்திற்கு லான்சுலாட் கொடுத்த அறிக்கையில், இதன் மூல ஆதாரம் ஒரு கல்லறையின் மூடியாகவோ, சுவரோவியமாகவோ, கண்ணாடி ஓவியமாகவோ, அல்லது கைவேலைப்பாடுகளுடனான திரைக்கம்பளமாகவோ இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.[4]

Remove ads

வேலைப்பாடு

Thumb
முழுநீள பேயூ திரைக்கம்பளம்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads