பேராலயம்

From Wikipedia, the free encyclopedia

பேராலயம்
Remove ads

அரியணைக் கோயில் அல்லது கதீட்ரல் என்பது ஒரு கிறித்தவ மறைமாவட்டத்தின் தலைமைக் கோயில் ஆகும். (cathedral, இலத்தீனிடமிருந்து பிரான்சியம் cathédrale). கிரேக்க மொழியில் cathedra என்பதற்கு "இருக்கை" அல்லது “அரியணை” என்பது பொருளாகும். ஒரு மறைமாவட்டத்தின் ஆயரின் அரியணை அமைந்திருக்கும் தலைமைக் கோயில் ‘கத்தீட்ரல்’ என ஆங்கிலத்திலும் ‘அரியணைக் கோயில்’ என தூய தமிழிலும் அழைக்கப்படுகிறது. பழைய வழக்கில் மெற்றிறாசனக் கோவில் என அழைக்கப்பட்டது (ஆயர்கள் மேற்றானியர் என அழைக்கப்பட்டனர், மேற்றானியர்+ஆசனம்).[1]கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில லூதரனிய மெதடிச திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகை பயன்பாடு உள்ளது.[2] ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் இத்தாலி, கால், எசுப்பானியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபையில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் தலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் ஆகியவை உருவாகத் தொடங்கின.

Thumb
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கான ஆங்கிலிக்க ஆயரின் இருக்கை.
Thumb
São Paulo Cathedral, a representative modern cathedral built in Neo-Gothic style.
Thumb
தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராலயம்

கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்களும், படிநிலை ஆட்சியமைப்பம் இல்லாமல் அமைந்தன. ஆயினும் அந்த இடங்களில் இருந்த மறைமாவட்டப் பேராலய கட்டிடங்கள் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டன; 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதிய பணித்தளங்களை தோற்றுவித்தன. மேலும் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழி திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப்திருச்சபையின் ஆட்சிவட்டத்துள் பல புதிய மறைத்தூதுப் பணித்தளங்களை உருவாக்கின. இவற்றால் ஒரே நகரில் பல்வேறு கிறித்தவ பிரிவுகளின் அரியணைக் கோயில்கள் இருக்கலாம்.

ஒரு பங்கு கோயில் (Parish Church) தற்காலிகமாக மறைமாவட்டப் அரியணைக் கோயிலாகப் பயன்படுத்தப்படும்போது அதனை மறைமாவட்டப் பதில் அரியணைக் கோயில் (Pro-cathedral) என்று அழைக்கின்றனர். பேராயர் அல்லது உயர் மறைமாவட்ட ஆயரின் ஆட்சி அரியணை உயர்மறைமாவட்ட அரியணைக் கோயில் (Metropolitan cathedral) என அழைக்கப்படுகிறது. ஒரே மறைமாவட்டத்துக்குள்ளேயே ஒரே திருஅவையின் இரண்டு கோயில்கள் ஒரே ஆயரின் அரியணையின் இருப்பிடமாக அமைந்திருக்கலாம். இவ்வகை ஆலயங்களில் ஒன்று மறைமாவட்ட அரியணைக் கோயில் எனவும் மற்றொன்று மறைமாவட்டப் இணை அரியணைக் கோயில் (Co-cathedral) எனவும் அழைக்கப்படும்.

Remove ads

காட்சிக் கூடம்

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads